குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௬
Qur'an Surah Saba Verse 16
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَيْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ (سبإ : ٣٤)
- fa-aʿraḍū
- فَأَعْرَضُوا۟
- But they turned away
- ஆனால் புறக்கணித்தனர்
- fa-arsalnā
- فَأَرْسَلْنَا
- so We sent
- ஆகவே அனுப்பினோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- upon them
- அவர்கள் மீது
- sayla
- سَيْلَ
- (the) flood
- பெரும் வெள்ளத்தை
- l-ʿarimi
- ٱلْعَرِمِ
- (of) the dam
- அடியோடு அரித்து செல்கின்ற
- wabaddalnāhum
- وَبَدَّلْنَٰهُم
- and We changed for them
- இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு
- bijannatayhim
- بِجَنَّتَيْهِمْ
- their two gardens
- அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக
- jannatayni
- جَنَّتَيْنِ
- (with) two gardens
- இரண்டு தோட்டங்களை
- dhawātay
- ذَوَاتَىْ
- producing fruit
- உடைய
- ukulin
- أُكُلٍ
- producing fruit
- பழங்கள்
- khamṭin
- خَمْطٍ
- bitter
- துர்நாற்றமுள்ள
- wa-athlin
- وَأَثْلٍ
- and tamarisks
- இன்னும் காய்க்காத மரங்கள்
- washayin min sid'rin qalīlin
- وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
- and (some)thing of lote trees few
- இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை
Transliteration:
Fa-a''radoo fa-arsalnaa 'alaihim Sailal 'Arimi wa baddalnaahum bijannataihim jannataini azwaatai ukulin khamtinw wa aslinw wa shai'im min sidrin qaleel(QS. Sabaʾ:16)
English Sahih International:
But they turned away [refusing], so We sent upon them the flood of the dam, and We replaced their two [fields of] gardens with gardens of bitter fruit, tamarisks and something of sparse lote trees. (QS. Saba, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
எனினும், அவர்கள் (அதனைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தான தொரு ஏரியை உடைக்கக் கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களையும், சில இலந்தை மரங்களையும் கொண்ட தோப்புகளாக மாற்றிவிட்டோம். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆனால், அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கின்ற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களுக்குப் பதிலாக (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களை உடைய, காய்க்காத மரங்களை உடைய, இன்னும் மிகக்குறைவான சில இலந்தை மரங்களை உடைய இரண்டு தோட்டங்களை மாற்றிவிட்டோம்.