குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௩
Qur'an Surah Saba Verse 13
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَاۤءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍۗ اِعْمَلُوْٓا اٰلَ دَاوٗدَ شُكْرًا ۗوَقَلِيْلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُوْرُ (سبإ : ٣٤)
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- They worked
- அவை செய்கின்றன
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- mā yashāu
- مَا يَشَآءُ
- what he willed
- அவர் நாடுகின்ற(தை)
- min maḥārība
- مِن مَّحَٰرِيبَ
- of elevated chambers
- தொழுமிடங்களை(யும்)
- watamāthīla
- وَتَمَٰثِيلَ
- and statues
- சிலைகளையும்
- wajifānin
- وَجِفَانٍ
- and bowls
- பாத்திரங்களையும்
- kal-jawābi
- كَٱلْجَوَابِ
- like reservoirs
- நீர் தொட்டிகளைப் போன்ற
- waqudūrin
- وَقُدُورٍ
- and cooking-pots
- சட்டிகளையும்
- rāsiyātin
- رَّاسِيَٰتٍۚ
- fixed
- உறுதியான
- iʿ'malū
- ٱعْمَلُوٓا۟
- "Work
- செய்யுங்கள்
- āla
- ءَالَ
- O family
- குடும்பத்தார்களே!
- dāwūda
- دَاوُۥدَ
- (of) Dawood!
- தாவூதின்
- shuk'ran
- شُكْرًاۚ
- (in) gratitude"
- நன்றி செலுத்துவதற்காக
- waqalīlun
- وَقَلِيلٌ
- But few
- குறைவானவர்களே
- min ʿibādiya
- مِّنْ عِبَادِىَ
- of My slaves
- என் அடியார்களில்
- l-shakūru
- ٱلشَّكُورُ
- (are) grateful
- நன்றி செலுத்துபவர்கள்
Transliteration:
Ya'maloona lahoo ma yashaaa'u mim mahaareeba wa tamaaseela wa jifaanin kaljawaabi wa qudoorir raasiyaat; i'maloo aala Daawooda shukraa; wa qaleelum min 'ibaadiyash shakoor(QS. Sabaʾ:13)
English Sahih International:
They made for him what he willed of elevated chambers, statues, bowls like reservoirs, and stationary kettles. [We said], "Work, O family of David, in gratitude." And few of My servants are grateful. (QS. Saba, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அ(ன்றி, ஜின் ஆகிய)வைகள் ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) "தேகு" (சமையல் பாத்திரங்)களையும் செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) "தாவூதுடைய சந்ததிகளே! இவைகளுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்" (என்று கட்டளையிட்டோம்). எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கின்றார்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவை (-அந்த ஷைத்தான்கள்) அவருக்கு அவர் நாடுகின்ற தொழுமிடங்களையும் சிலைகளையும் நீர் தொட்டிகளைப் போன்ற பாத்திரங்களையும் உறுதியான சட்டிகளையும் செய்கின்றன. தாவூதின் குடும்பத்தார்களே! (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவதற்காக (நன்மைகளை) செய்யுங்கள். என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் குறைவானவர்களே.