குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௧
Qur'an Surah Saba Verse 11
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِى السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًاۗ اِنِّيْ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (سبإ : ٣٤)
- ani iʿ'mal
- أَنِ ٱعْمَلْ
- That make
- செய்வீராக!
- sābighātin
- سَٰبِغَٰتٍ
- full coats of mail
- உருக்குச் சட்டைகள்
- waqaddir
- وَقَدِّرْ
- and measure precisely
- இன்னும் அளவாக செய்வீராக!
- fī l-sardi
- فِى ٱلسَّرْدِۖ
- [of] the links (of armor)
- ஆணிகளை
- wa-iʿ'malū
- وَٱعْمَلُوا۟
- and work
- இன்னும் செய்யுங்கள்
- ṣāliḥan
- صَٰلِحًاۖ
- righteousness
- நன்மையை
- innī
- إِنِّى
- Indeed I Am
- நிச்சயமாக நான்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்வதை
- baṣīrun
- بَصِيرٌ
- All-Seer
- உற்று நோக்குகின்றேன்
Transliteration:
Ani'mal saabighaatinw wa qaddir fis sardi wa'maloo saalihan innee bimaa ta'maloona Baseer(QS. Sabaʾ:11)
English Sahih International:
[Commanding him], "Make full coats of mail and calculate [precisely] the links, and work [all of you] righteousness. Indeed I, of what you do, am Seeing." (QS. Saba, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
மேலும், (சங்கிலி) வளையங்களை (முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யும்படியும் (கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) "நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாக இருக்கிறேன்" (என்றோம்). (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
“வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்” (என்றும் சொன்னோம்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உருக்குச் சட்டைகள் செய்வீராக! (சட்டைகளில் உள்ள துவாரங்களுக்கு ஏற்ப) ஆணிகளை அளவாக செய்வீராக! (தாவூதே! தாவூதின் குடும்பத்தாரே!) நன்மையை செய்யுங்கள்! நிச்சயமாக நான் நீங்கள் செய்வதை உற்று நோக்குகின்றேன்.