குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௦
Qur'an Surah Saba Verse 10
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًاۗ يٰجِبَالُ اَوِّبِيْ مَعَهٗ وَالطَّيْرَ ۚوَاَلَنَّا لَهُ الْحَدِيْدَۙ (سبإ : ٣٤)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- We gave
- வழங்கினோம்
- dāwūda
- دَاوُۥدَ
- Dawood
- தாவூதுக்கு
- minnā
- مِنَّا
- from Us
- நம் புறத்தில் இருந்து
- faḍlan
- فَضْلًاۖ
- Bounty
- மேன்மையை
- yājibālu
- يَٰجِبَالُ
- "O mountains!
- மலைகளே!
- awwibī
- أَوِّبِى
- Repeat praises
- நீங்கள் துதியுங்கள்
- maʿahu
- مَعَهُۥ
- with him
- அவருடன்
- wal-ṭayra
- وَٱلطَّيْرَۖ
- and the birds"
- பறவைகளே!
- wa-alannā
- وَأَلَنَّا
- And We made pliable
- இன்னும் மென்மையாக்கினோம்
- lahu
- لَهُ
- for him
- அவருக்கு
- l-ḥadīda
- ٱلْحَدِيدَ
- [the] iron
- இரும்பை
Transliteration:
Wa laqad aatainaa Daawooda minnaa fadlany yaa jibaalu awwibee ma'ahoo wattaira wa alannaa lahul hadeed(QS. Sabaʾ:10)
English Sahih International:
And We certainly gave David from Us bounty. [We said], "O mountains, repeat [Our] praises with him, and the birds [as well]." And We made pliable for him iron, (QS. Saba, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே நாம் தாவூதுக்குப் பெரும் அருள்புரிந்து மலைகளை நோக்கி "நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். அவ்வாறே பறவைகளுக்கும் (கட்டளையிட்டோம். அன்றி,) அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மெதுவாக்கித் தந்தோம். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௦)
Jan Trust Foundation
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக தாவூதுக்கு நம் புறத்தில் இருந்து மேன்மையை(யும் பறவைகளையும்) வழங்கினோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் (அல்லாஹ்வை) துதியுங்கள். இன்னும் அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.