Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸபா - Page: 5

Saba

(Sabaʾ)

௪௧

قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِيُّنَا مِنْ دُوْنِهِمْ ۚبَلْ كَانُوْا يَعْبُدُوْنَ الْجِنَّ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ٤١

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
நீ மகா தூயவன்
anta
أَنتَ
நீதான்
waliyyunā
وَلِيُّنَا
எங்கள் பாதுகாவலன்
min dūnihim
مِن دُونِهِمۖ
அவர்கள் இன்றி
bal kānū yaʿbudūna
بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ
மாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர்
l-jina
ٱلْجِنَّۖ
ஜின்களை
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
bihim
بِهِم
அவர்களைத்தான்
mu'minūna
مُّؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டவர்கள்
அதற்கவர்கள் "(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் இறைவன்; அவர்களன்று. (இவர்கள் எங்களை) அல்ல! ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களையே (அந்த ஜின்களையே) நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்" என்று கூறுவார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௧)
Tafseer
௪௨

فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ۗوَنَقُوْلُ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِيْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ٤٢

fal-yawma
فَٱلْيَوْمَ
இன்றைய தினம்
lā yamliku
لَا يَمْلِكُ
உரிமை பெறமாட்டார்
baʿḍukum
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
nafʿan
نَّفْعًا
நன்மைசெய்வதற்கோ
walā ḍarran
وَلَا ضَرًّا
தீமை செய்வதற்கோ
wanaqūlu
وَنَقُولُ
நாம் கூறுவோம்
lilladhīna ẓalamū
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்களுக்கு
dhūqū
ذُوقُوا۟
நீங்கள் சுவையுங்கள்
ʿadhāba l-nāri
عَذَابَ ٱلنَّارِ
நரக வேதனையை
allatī kuntum bihā tukadhibūna
ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த
அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். அன்றி (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி "நீங்கள் (நம்முடைய வேதனையைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்" எனக் கூறுவோம். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௨)
Tafseer
௪௩

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَآ اِلَّا رَجُلٌ يُّرِيْدُ اَنْ يَّصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَاۤؤُكُمْ ۚوَقَالُوْا مَا هٰذَآ اِلَّآ اِفْكٌ مُّفْتَرًىۗ وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَاۤءَهُمْۙ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ٤٣

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் முன்
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
mā hādhā
مَا هَٰذَآ
இவர் இல்லை
illā
إِلَّا
தவிர
rajulun
رَجُلٌ
ஓர் ஆடவரே
yurīdu
يُرِيدُ
நாடுகின்றனர்
an yaṣuddakum
أَن يَصُدَّكُمْ
இவர் உங்களைத் தடுக்க
ʿammā kāna yaʿbudu
عَمَّا كَانَ يَعْبُدُ
வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும்
ābāukum
ءَابَآؤُكُمْ
மூதாதைகள் உங்கள்
waqālū
وَقَالُوا۟
இன்னும் அவர்கள்கூறினர்
mā hādhā
مَا هَٰذَآ
இது இல்லை
illā
إِلَّآ
தவிர
if'kun
إِفْكٌ
பொய்
muf'taran
مُّفْتَرًىۚ
இட்டுக்கட்டப்பட்ட
waqāla
وَقَالَ
இன்னும் கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lil'ḥaqqi
لِلْحَقِّ
சத்தியம்
lammā
لَمَّا
வந்த போது
jāahum
جَآءَهُمْ
தங்களிடம்
in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā
إِلَّا
தவிர
siḥ'run
سِحْرٌ
சூனியமே
mubīnun
مُّبِينٌ
தெளிவான
அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) "இவர் ஒரு சாதாரண மனிதரே அன்றி வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவைகளிலிருந்து உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்றும் (நம்முடைய தூதர் கூறுகிற) "இது வெறும் கட்டுக்கதையேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். அன்றி "(திருக்குர்ஆனாகிய) இந்த உண்மை வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௩)
Tafseer
௪௪

وَمَآ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَآ اَرْسَلْنَآ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍۗ ٤٤

wamā ātaynāhum
وَمَآ ءَاتَيْنَٰهُم
அவர்களுக்கு நாம் கொடுத்ததில்லை
min kutubin
مِّن كُتُبٍ
வேதங்களை
yadrusūnahā
يَدْرُسُونَهَاۖ
அவர்கள் அவற்றை படிக்கின்றனர்
wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَآ
நாம் அனுப்பியதில்லை
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
qablaka
قَبْلَكَ
உமக்கு முன்னர்
min nadhīrin
مِن نَّذِيرٍ
எச்சரிப்பவர் எவரையும்
(நபியே! இதற்கு முன்னர்) நாம் (உங்களை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய யாதொரு வேதத்தையும் கொடுக்கவும் இல்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய யாதொரு தூதரையும் உங்களுக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவுமில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௪)
Tafseer
௪௫

وَكَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَآ اٰتَيْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِيْۗ فَكَيْفَ كَانَ نَكِيْرِ ࣖ ٤٥

wakadhaba
وَكَذَّبَ
பொய்ப்பித்தனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
wamā balaghū
وَمَا بَلَغُوا۟
அடையவில்லை
miʿ'shāra mā ātaynāhum
مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றை(க்கூட)
fakadhabū
فَكَذَّبُوا۟
(இருந்தும்) அவர்கள் பொய்ப்பித்தனர்
rusulī
رُسُلِىۖ
எனது தூதர்களை
fakayfa
فَكَيْفَ
எப்படி
kāna
كَانَ
இருந்தது
nakīri
نَكِيرِ
எனது மாற்றம்
இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் (அவர்களிடம் அனுப்பப்பட்ட நம்முடைய தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள் ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நமது தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களா?) ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௫)
Tafseer
௪௬

۞ قُلْ اِنَّمَآ اَعِظُكُمْ بِوَاحِدَةٍۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰى وَفُرَادٰى ثُمَّ تَتَفَكَّرُوْاۗ مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍۗ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ لَّكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيْدٍ ٤٦

qul
قُلْ
கூறுவீராக!
innamā aʿiẓukum
إِنَّمَآ أَعِظُكُم
நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம்
biwāḥidatin
بِوَٰحِدَةٍۖ
ஒன்றே ஒன்றைத்தான்
an taqūmū
أَن تَقُومُوا۟
நீங்கள் நில்லுங்கள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்காக
mathnā
مَثْنَىٰ
இருவர் இருவராக
wafurādā
وَفُرَٰدَىٰ
இன்னும் ஒருவர் ஒருவராக
thumma
ثُمَّ
பிறகு
tatafakkarū
تَتَفَكَّرُوا۟ۚ
சிந்தியுங்கள்
mā biṣāḥibikum
مَا بِصَاحِبِكُم
உங்கள் இந்த தோழருக்கு அறவே இல்லை
min jinnatin
مِّن جِنَّةٍۚ
பைத்தியம்
in huwa
إِنْ هُوَ
அவர் இல்லை
illā
إِلَّا
தவிர
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பவரே
lakum
لَّكُم
உங்களுக்கு
bayna yaday
بَيْنَ يَدَىْ
முன்னர்
ʿadhābin
عَذَابٍ
வேதனைக்கு
shadīdin
شَدِيدٍ
கடுமையான(து)
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களுக்கு உபதேசிப்ப தெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டிரண்டு பேர்களாகவோ அல்லாஹ்வுக்காகச் சிறிது பொறுத்திருந்து, பின்னர் (உங்களுக்குள்) ஆலோசித்துப் பாருங்கள். உங்களுடைய சிநேகிதராகிய எனக்கு எத்தகைய பைத்தியமும் இல்லை. (நான் உங்களுக்குக்) கடினமான வேதனை வருவதற்கு முன்னர் (அதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவ னேயன்றி வேறில்லை. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௬)
Tafseer
௪௭

قُلْ مَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَكُمْۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ ۚوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ٤٧

qul
قُلْ
கூறுவீராக!
mā sa-altukum
مَا سَأَلْتُكُم
எதை நான் உங்களிடம் கேட்டேனோ
min ajrin
مِّنْ أَجْرٍ
கூலியாக
fahuwa lakum
فَهُوَ لَكُمْۖ
அது உங்களுக்கே
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā
عَلَى
மீதே
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
wahuwa
وَهُوَ
அவன்தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
அனைத்தின் மீதும்
shahīdun
شَهِيدٌ
சாட்சியாளன்
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களிடத்தில் யாதொரு கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்தையும் அறியக் கூடியவனாக இருக்கின்றான். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௭)
Tafseer
௪௮

قُلْ اِنَّ رَبِّيْ يَقْذِفُ بِالْحَقِّۚ عَلَّامُ الْغُيُوْبِ ٤٨

qul
قُلْ
கூறுவீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
yaqdhifu
يَقْذِفُ
செய்தியை இறக்குகின்றான்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையான
ʿallāmu
عَلَّٰمُ
மிக அறிந்தவன்
l-ghuyūbi
ٱلْغُيُوبِ
மறைவான விஷயங்கள் அனைத்தையும்
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எனது இறைவன் (பொய்யை அழிப்பதற்காக) மெய்யைத் தெளிவாக்குகின்றான். மறைவானவை அனைத்தையும் அவன் நன்கறிந்தவன். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௮)
Tafseer
௪௯

قُلْ جَاۤءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيْدُ ٤٩

qul
قُلْ
கூறுவீராக!
jāa
جَآءَ
வந்துவிட்டது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
wamā yub'di-u
وَمَا يُبْدِئُ
புதிதாக படைக்க(வும்) மாட்டான்
l-bāṭilu
ٱلْبَٰطِلُ
பொய்யன்
wamā yuʿīdu
وَمَا يُعِيدُ
மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்
(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றையும் (இதுவரையில்) செய்துவிடவில்லை. இனியும் செய்யப்போவதில்லை." ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௯)
Tafseer
௫௦

قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَآ اَضِلُّ عَلٰى نَفْسِيْۚ وَاِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوْحِيْٓ اِلَيَّ رَبِّيْۗ اِنَّهٗ سَمِيْعٌ قَرِيْبٌ ٥٠

qul
قُلْ
கூறுவீராக!
in ḍalaltu
إِن ضَلَلْتُ
நான் வழிகெட்டால்
fa-innamā aḍillu
فَإِنَّمَآ أَضِلُّ
நான் வழிகெடுவதெல்லாம்
ʿalā nafsī
عَلَىٰ نَفْسِىۖ
எனக்குத்தான் தீங்காக அமையும்
wa-ini ih'tadaytu
وَإِنِ ٱهْتَدَيْتُ
நான் நேர்வழி பெற்றால்
fabimā yūḥī
فَبِمَا يُوحِىٓ
வஹீ அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும்
ilayya
إِلَىَّ
எனக்கு
rabbī
رَبِّىٓۚ
என் இறைவன்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
qarībun
قَرِيبٌ
மிக சமீபமானவன்
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நான் வழி தவறியிருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹீ மூலமாக அறிவித் ததன் காரணமாகவேயாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் (அனைத்திற்கும்) சமீபமானவனாகவும் இருக்கின்றான். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௫௦)
Tafseer