Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸபா - Page: 4

Saba

(Sabaʾ)

௩௧

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِيْ بَيْنَ يَدَيْهِۗ وَلَوْ تَرٰىٓ اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْۖ يَرْجِعُ بَعْضُهُمْ اِلٰى بَعْضِ ِۨالْقَوْلَۚ يَقُوْلُ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا لَوْلَآ اَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِيْنَ ٣١

waqāla
وَقَالَ
கூறினார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்கள்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
bihādhā l-qur'āni
بِهَٰذَا ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனை(யும்)
walā bi-alladhī bayna yadayhi
وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِۗ
இதற்கு முன்னுள்ளதையும்
walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idhi l-ẓālimūna
إِذِ ٱلظَّٰلِمُونَ
சமயத்தை/அநியாயக்காரர்கள்
mawqūfūna
مَوْقُوفُونَ
நிறுத்தி வைக்கப்பட்டவர்கள்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவன் முன்னால்
yarjiʿu
يَرْجِعُ
எதிர்த்துப் பேசுவார்(கள்)
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ilā baʿḍin
إِلَىٰ بَعْضٍ
சிலரிடம்
l-qawla
ٱلْقَوْلَ
பேசுவது
yaqūlu
يَقُولُ
கூறுவார்கள்
alladhīna us'tuḍ'ʿifū
ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
பலவீனர்கள்
lilladhīna is'takbarū
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தவர்களுக்கு
lawlā antum
لَوْلَآ أَنتُمْ
நீங்கள் இல்லை என்றால்
lakunnā
لَكُنَّا
நாங்கள் ஆகியிருப்போம்
mu'minīna
مُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
"நிச்சயமாக நாங்கள் இந்தக் குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் (நம்பமாட்டோம்)" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக் காரர்கள் தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு அவர்களில் (சிலர் சிலரை நிந்திப்பதையும்) பலவீனமானவர்கள் கர்வம் கொண்ட வர்களை நோக்கி "நீங்கள் இல்லாவிடில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்" என்று கூறுவதையும் நீங்கள் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்கள்). ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௧)
Tafseer
௩௨

قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْٓا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰى بَعْدَ اِذْ جَاۤءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِيْنَ ٣٢

qāla
قَالَ
கூறுவார்கள்
alladhīna is'takbarū
ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தவர்கள்
lilladhīna us'tuḍ'ʿifū
لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟
பலவீனர்களுக்கு
anaḥnu
أَنَحْنُ
நாங்களா?
ṣadadnākum
صَدَدْنَٰكُمْ
உங்களை தடுத்தோம்
ʿani l-hudā
عَنِ ٱلْهُدَىٰ
நேர்வழியை விட்டும்
baʿda idh
بَعْدَ إِذْ
வந்த பின்னர்
jāakum
جَآءَكُمۖ
உங்களிடம்
bal
بَلْ
மாறாக
kuntum
كُنتُم
நீங்கள்தான் இருந்தீர்கள்
muj'rimīna
مُّجْرِمِينَ
குற்றவாளிகளாக
அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி "உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்துக் கொண்டோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளானீர்கள்" என்று கூறுவார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௨)
Tafseer
௩௩

وَقَالَ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّيْلِ وَالنَّهَارِ اِذْ تَأْمُرُوْنَنَآ اَنْ نَّكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗٓ اَنْدَادًا ۗوَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَۗ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِيْٓ اَعْنَاقِ الَّذِيْنَ كَفَرُوْاۗ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٣٣

waqāla
وَقَالَ
கூறுவார்கள்
alladhīna us'tuḍ'ʿifū
ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
பலவீனர்கள்
lilladhīna is'takbarū
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
பெருமை அடித்தவர்களுக்கு
bal
بَلْ
மாறாக
makru
مَكْرُ
சூழ்ச்சியாகும்
al-layli
ٱلَّيْلِ
இரவிலும்
wal-nahāri
وَٱلنَّهَارِ
பகலிலும்
idh tamurūnanā
إِذْ تَأْمُرُونَنَآ
நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள்
an nakfura
أَن نَّكْفُرَ
நாங்கள் நிராகரிப்பதற்கு(ம்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wanajʿala
وَنَجْعَلَ
நாங்கள்ஏற்படுத்துவதற்கும்
lahu
لَهُۥٓ
அவனுக்கு
andādan
أَندَادًاۚ
இணைகளை
wa-asarrū
وَأَسَرُّوا۟
இன்னும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள்
l-nadāmata
ٱلنَّدَامَةَ
துக்கத்தை
lammā ra-awū
لَمَّا رَأَوُا۟
அவர்கள் கண்ணால் காணும்போது
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
wajaʿalnā
وَجَعَلْنَا
நாம் ஆக்குவோம்
l-aghlāla
ٱلْأَغْلَٰلَ
(சங்கிலி)விலங்குகளை
fī aʿnāqi
فِىٓ أَعْنَاقِ
கழுத்துகளில்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
நிராகரித்தவர்களின்
hal yuj'zawna
هَلْ يُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவார்களா?
illā mā kānū yaʿmalūna
إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
தவிர/அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே
அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந் தவர்களை நோக்கி "என்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு அவனுக்கு இணைவைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?" என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். ஆனால், நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியையன்றி மற்றெதுவும் கொடுக்கப் படுவார்களா? ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௩)
Tafseer
௩௪

وَمَآ اَرْسَلْنَا فِيْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ ِالَّا قَالَ مُتْرَفُوْهَآ ۙاِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ٣٤

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
fī qaryatin
فِى قَرْيَةٍ
ஓர் ஊரில்
min nadhīrin
مِّن نَّذِيرٍ
எச்சரிப்பாளரை
illā
إِلَّا
தவிர
qāla
قَالَ
கூறியே
mut'rafūhā
مُتْرَفُوهَآ
அதன் சுகவாசிகள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
bimā
بِمَآ
எதைக்கொண்டு
ur'sil'tum bihi
أُرْسِلْتُم بِهِۦ
நீங்கள் அனுப்பப்பட்டீர்கள்/அதை
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிக்கின்றோம்
நாம் நம்முடைய அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதரை எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) "நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௪)
Tafseer
௩௫

وَقَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًاۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ ٣٥

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
naḥnu
نَحْنُ
நாங்கள்
aktharu
أَكْثَرُ
அதிகமானவர்கள்
amwālan
أَمْوَٰلًا
செல்வங்களாலும்
wa-awlādan
وَأَوْلَٰدًا
பிள்ளைகளாலும்
wamā naḥnu bimuʿadhabīna
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.
அன்றி "நாங்கள் அதிகமான பொருளையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்" என்று கூறினர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௫)
Tafseer
௩௬

قُلْ اِنَّ رَبِّيْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ࣖ ٣٦

qul
قُلْ
கூறுவீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
yabsuṭu
يَبْسُطُ
விசாலமாக தருகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
அவன் நாடுகின்றவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُ
இன்னும் சுருக்கி கொடுக்கின்றான்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்குப் பொருளை அதிகமாகவும் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகின்றான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்வதில்லை." ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௬)
Tafseer
௩௭

وَمَآ اَمْوَالُكُمْ وَلَآ اَوْلَادُكُمْ بِالَّتِيْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰىٓ اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًاۙ فَاُولٰۤىِٕكَ لَهُمْ جَزَاۤءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِى الْغُرُفٰتِ اٰمِنُوْنَ ٣٧

wamā amwālukum
وَمَآ أَمْوَٰلُكُمْ
உங்கள் செல்வங்கள் இல்லை
walā awlādukum
وَلَآ أَوْلَٰدُكُم
இன்னும் உங்கள் பிள்ளைகள்
bi-allatī tuqarribukum
بِٱلَّتِى تُقَرِّبُكُمْ
உங்களை நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக
ʿindanā
عِندَنَا
எங்களிடம்
zul'fā
زُلْفَىٰٓ
நெருக்கமாக
illā
إِلَّا
எனினும்
man
مَنْ
எவர்கள்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டு
waʿamila
وَعَمِلَ
செய்வார்களோ
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
fa-ulāika lahum
فَأُو۟لَٰٓئِكَ لَهُمْ
அவர்களுக்கு உண்டு
jazāu
جَزَآءُ
கூலி
l-ḍiʿ'fi
ٱلضِّعْفِ
இரு மடங்கு
bimā ʿamilū
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததற்கு பகரமாக
wahum
وَهُمْ
அவர்கள்
fī l-ghurufāti
فِى ٱلْغُرُفَٰتِ
அறைகளில்
āminūna
ءَامِنُونَ
நிம்மதியாக
(நீங்கள் எண்ணுகிறவாறு) உங்களுடைய பொருள்களும் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவைகளல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) இத்தகையவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. அன்றி, அவர்கள் (சுவனபதியிலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௭)
Tafseer
௩௮

وَالَّذِيْنَ يَسْعَوْنَ فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ ٣٨

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yasʿawna
يَسْعَوْنَ
முயல்வார்களோ
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
muʿājizīna
مُعَٰجِزِينَ
பலவீனப்படுத்த
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
வேதனைக்கு
muḥ'ḍarūna
مُحْضَرُونَ
கொண்டு வரப்படுவார்கள்
எவர்கள் நம்முடைய வசனங்களுக்கு எதிரிடையாக முயற்சிக்கின்றார்களோ அவர்கள் (நம்முடைய) வேதனையை அடைவதற்காக (நம்முன்) கொண்டு வரப்படுவார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௮)
Tafseer
௩௯

قُلْ اِنَّ رَبِّيْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ۗوَمَآ اَنْفَقْتُمْ مِّنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهٗ ۚوَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ ٣٩

qul
قُلْ
கூறுவீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
yabsuṭu
يَبْسُطُ
விசாலமாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
தனது அடியார்களில்
wayaqdiru
وَيَقْدِرُ
இன்னும் சுருக்கி விடுகின்றான்
lahu
لَهُۥۚ
அவனுக்கு
wamā anfaqtum
وَمَآ أَنفَقْتُم
நீங்கள் தர்மம் செய்தாலும்
min shayin
مِّن شَىْءٍ
எதை
fahuwa
فَهُوَ
அவன்
yukh'lifuhu
يُخْلِفُهُۥۖ
அதற்கு பகரத்தை ஏற்படுத்துவான்
wahuwa
وَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான பொருளைக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு) அதன் அளவைக் குறைத்தும் விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௯)
Tafseer
௪௦

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ يَقُوْلُ لِلْمَلٰۤىِٕكَةِ اَهٰٓؤُلَاۤءِ اِيَّاكُمْ كَانُوْا يَعْبُدُوْنَ ٤٠

wayawma
وَيَوْمَ
அவன் ஒன்று திரட்டும் நாளில்
yaḥshuruhum
يَحْشُرُهُمْ
அவன் ஒன்று திரட்டும் நாளில் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
thumma
ثُمَّ
பிறகு
yaqūlu
يَقُولُ
அவன் கூறுவான்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
ahāulāi
أَهَٰٓؤُلَآءِ
?/இவர்கள்
iyyākum
إِيَّاكُمْ
உங்களை
kānū yaʿbudūna
كَانُوا۟ يَعْبُدُونَ
வணங்கிக் கொண்டிருந்தார்கள்
(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், மலக்குகளை நோக்கி "இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?" என்று கேட்கப்படும். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪௦)
Tafseer