Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸபா - Page: 3

Saba

(Sabaʾ)

௨௧

وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطَانٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ يُّؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِيْ شَكٍّ ۗوَرَبُّكَ عَلٰى كُلِّ شَيْءٍ حَفِيْظٌ ࣖ ٢١

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
lahu
لَهُۥ
அவனுக்கு
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
min sul'ṭānin
مِّن سُلْطَٰنٍ
அறவே அதிகாரம்
illā
إِلَّا
இருந்தாலும்
linaʿlama
لِنَعْلَمَ
நாம் அறிவதற்காக
man
مَن
எவர்
yu'minu
يُؤْمِنُ
நம்புகின்றார்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
mimman
مِمَّنْ
இருந்து/எவர்கள்
huwa
هُوَ
அவர்(கள்)
min'hā
مِنْهَا
அதில்
fī shakkin
فِى شَكٍّۗ
சந்தேகத்தில்
warabbuka
وَرَبُّكَ
உமது இறைவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ḥafīẓun
حَفِيظٌ
கண்காணிக்கின்றவன்
எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறிவித்து விடுவதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உங்களது இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௧)
Tafseer
௨௨

قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِۚ لَا يَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَمَا لَهُمْ فِيْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِيْرٍ ٢٢

quli
قُلِ
கூறுவீராக!
id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்!
alladhīna zaʿamtum
ٱلَّذِينَ زَعَمْتُم
நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِۖ
அல்லாஹ்வையன்றி
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
அவர்கள் உரிமை பெறமாட்டார்கள்
mith'qāla dharratin
مِثْقَالَ ذَرَّةٍ
அணு அளவுக்கு(ம்)
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِ
பூமியிலும்
wamā lahum
وَمَا لَهُمْ
அவர்களுக்கு இல்லை
fīhimā
فِيهِمَا
அவ்விரண்டிலும்
min shir'kin
مِن شِرْكٍ
எவ்வித பங்கும்
wamā lahu
وَمَا لَهُۥ
அவனுக்கு இல்லை
min'hum
مِنْهُم
அவர்களில்
min ẓahīrin
مِّن ظَهِيرٍ
உதவியாளர் எவரும்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி எவைகளை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவைகளை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானத்திலோ பூமியிலோ அவைகளுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. அன்றி, அவைகளை படைப்பதில் இவைகளுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவைகளை படைப்பதில்) இவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௨)
Tafseer
௨௩

وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗٓ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ۗحَتّٰىٓ اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَاۙ قَالَ رَبُّكُمْۗ قَالُوا الْحَقَّۚ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيْرُ ٢٣

walā tanfaʿu
وَلَا تَنفَعُ
பலன்தராது
l-shafāʿatu
ٱلشَّفَٰعَةُ
சிபாரிசு
ʿindahu
عِندَهُۥٓ
அவனிடம்
illā liman
إِلَّا لِمَنْ
தவிர/எவருக்கு
adhina
أَذِنَ
அவன் அனுமதி அளித்தானோ
lahu
لَهُۥۚ
அவருக்கே
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā fuzziʿa
إِذَا فُزِّعَ
திடுக்கம் சென்றுவிட்டால்
ʿan qulūbihim
عَن قُلُوبِهِمْ
அவர்களது உள்ளங்களை விட்டு
qālū
قَالُوا۟
கேட்பார்கள்
mādhā
مَاذَا
என்ன?
qāla
قَالَ
கூறினான்
rabbukum
رَبُّكُمْۖ
உங்கள் இறைவன்
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
l-ḥaqa
ٱلْحَقَّۖ
உண்மையைத்தான்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
l-kabīru
ٱلْكَبِيرُ
மகா பெரியவன்
அவனுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர (மற்றெந்த மலக்கும்) அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய யாதொரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) "உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?" என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் "(இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவனும் மிகப் பெரியவனும் ஆவான்" என்று கூறுவார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௩)
Tafseer
௨௪

۞ قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلِ اللّٰهُ ۙوَاِنَّآ اَوْ اِيَّاكُمْ لَعَلٰى هُدًى اَوْ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٢٤

qul
قُلْ
கூறுவீராக!
man
مَن
யார்?
yarzuqukum
يَرْزُقُكُم
உங்களுக்கு உணவளிப்பான்
mina
مِّنَ
இருந்து
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
quli
قُلِ
நீர் கூறுவீராக!
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்தான்
wa-innā
وَإِنَّآ
நிச்சயமாக நாங்கள்
aw
أَوْ
அல்லது
iyyākum
إِيَّاكُمْ
நீங்களா?
laʿalā hudan
لَعَلَىٰ هُدًى
நேர்வழியில்
aw
أَوْ
அல்லது
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) "வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?" என்று கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) "அல்லாஹ்தான்" என்று (நீங்களே) கூறி "மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் யார்? பகிரங்கமான தவறான வழியில் இருப்பவன் யார்? (நீங்களா அல்லது நானா?)" என்றும் கேளுங்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௪)
Tafseer
௨௫

قُلْ لَّا تُسْـَٔلُوْنَ عَمَّآ اَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُوْنَ ٢٥

qul
قُل
கூறுவீராக!
lā tus'alūna
لَّا تُسْـَٔلُونَ
நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
ʿammā ajramnā
عَمَّآ أَجْرَمْنَا
நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி
walā nus'alu
وَلَا نُسْـَٔلُ
நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவைகளைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்" ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௫)
Tafseer
௨௬

قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِالْحَقِّۗ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيْمُ ٢٦

qul
قُلْ
கூறுவீராக!
yajmaʿu
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
baynanā
بَيْنَنَا
நமக்கு மத்தியில்
rabbunā
رَبُّنَا
நமது இறைவன்
thumma
ثُمَّ
பிறகு
yaftaḥu
يَفْتَحُ
அவன் தீர்ப்பளிப்பான்
baynanā
بَيْنَنَا
நமக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-fatāḥu
ٱلْفَتَّاحُ
உண்மையான தீர்ப்பளிப்பவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "முடிவில் (மறுமை நாளில்) நமதிறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) மிக்க நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௬)
Tafseer
௨௭

قُلْ اَرُوْنِيَ الَّذِيْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَاۤءَ كَلَّا ۗبَلْ هُوَ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٢٧

qul
قُلْ
கூறுவீராக!
arūniya
أَرُونِىَ
எனக்கு அறிவியுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
alḥaqtum
أَلْحَقْتُم
நீங்கள் சேர்ப்பித்தீர்கள்
bihi
بِهِۦ
அவனுடன்
shurakāa
شُرَكَآءَۖ
இணைகளாக
kallā
كَلَّاۚ
ஒருக்காலும் முடியாது
bal
بَلْ
மாறாக
huwa
هُوَ
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(அன்றி) "அல்லாஹ்வுக்கு இணையானவையென(க் கூறி) நீங்கள் அவனுக்குச் சமமாகச் சேர்த்து வைக்கின்றீர்களே அவைகளை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்" (என்று கேட்டு "அவனுக்கு ஒருவருமே இணை) இல்லை. அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வாகும்" என்று கூறுங்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௭)
Tafseer
௨௮

وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا كَاۤفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ٢٨

wamā arsalnāka
وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை நாம் அனுப்பவில்லை
illā
إِلَّا
தவிர
kāffatan
كَآفَّةً
அனைவருக்கும்
lilnnāsi
لِّلنَّاسِ
மக்கள்
bashīran
بَشِيرًا
நற்செய்தி சொல்பவராக(வும்)
wanadhīran
وَنَذِيرًا
எச்சரிப்பவராகவும்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௮)
Tafseer
௨௯

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٩

wayaqūlūna
وَيَقُولُونَ
கூறுகின்றார்கள்
matā
مَتَىٰ
எப்போது
hādhā
هَٰذَا
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நபியே!) "நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௯)
Tafseer
௩௦

قُلْ لَّكُمْ مِّيْعَادُ يَوْمٍ لَّا تَسْتَأْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ ࣖ ٣٠

qul
قُل
கூறுவீராக!
lakum
لَّكُم
உங்களுக்கு
mīʿādu
مِّيعَادُ
வாக்களிக்கப்பட்ட
yawmin
يَوْمٍ
ஒரு நாள்
lā tastakhirūna
لَّا تَسْتَـْٔخِرُونَ
நீங்கள் பிந்த(வும்) மாட்டீர்கள்
ʿanhu
عَنْهُ
அதை விட்டும்
sāʿatan
سَاعَةً
சிறிது நேரம்
walā tastaqdimūna
وَلَا تَسْتَقْدِمُونَ
முந்தவும் மாட்டீர்கள்
அதற்கு நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்." ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩௦)
Tafseer