Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸபா - Page: 2

Saba

(Sabaʾ)

௧௧

اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِى السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًاۗ اِنِّيْ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ١١

ani iʿ'mal
أَنِ ٱعْمَلْ
செய்வீராக!
sābighātin
سَٰبِغَٰتٍ
உருக்குச் சட்டைகள்
waqaddir
وَقَدِّرْ
இன்னும் அளவாக செய்வீராக!
fī l-sardi
فِى ٱلسَّرْدِۖ
ஆணிகளை
wa-iʿ'malū
وَٱعْمَلُوا۟
இன்னும் செய்யுங்கள்
ṣāliḥan
صَٰلِحًاۖ
நன்மையை
innī
إِنِّى
நிச்சயமாக நான்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குகின்றேன்
மேலும், (சங்கிலி) வளையங்களை (முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யும்படியும் (கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) "நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாக இருக்கிறேன்" (என்றோம்). ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௧)
Tafseer
௧௨

وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَاَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِۗ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهٖۗ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْرِ ١٢

walisulaymāna
وَلِسُلَيْمَٰنَ
இன்னும் சுலைமானுக்கு
l-rīḥa
ٱلرِّيحَ
காற்றை(யும்)
ghuduwwuhā
غُدُوُّهَا
அதன் காலைப்பொழுது(ம்)
shahrun
شَهْرٌ
ஒரு மாதமாகும்
warawāḥuhā
وَرَوَاحُهَا
இன்னும் அதன் மாலைப்பொழுதும்
shahrun
شَهْرٌۖ
ஒரு மாதமாகும்
wa-asalnā
وَأَسَلْنَا
இன்னும் ஓட வைத்தோம்
lahu
لَهُۥ
அவருக்கு
ʿayna
عَيْنَ
சுரங்கத்தை
l-qiṭ'ri
ٱلْقِطْرِۖ
செம்பினுடைய
wamina l-jini
وَمِنَ ٱلْجِنِّ
இன்னும் ஜின்களிலிருந்து
man yaʿmalu
مَن يَعْمَلُ
வேலை செய்கின்றவர்களை
bayna yadayhi
بَيْنَ يَدَيْهِ
அவருக்கு முன்னால்
bi-idh'ni
بِإِذْنِ
உத்தரவின் படி
rabbihi
رَبِّهِۦۖ
அவரது இறைவனின்
waman
وَمَن
யார்
yazigh
يَزِغْ
விலகுவாரோ
min'hum
مِنْهُمْ
அவர்களில்
ʿan amrinā
عَنْ أَمْرِنَا
நமது கட்டளையை விட்டு
nudhiq'hu
نُذِقْهُ
அவருக்கு நாம் சுவைக்க வைப்போம்
min ʿadhābi
مِنْ عَذَابِ
தண்டனையை
l-saʿīri
ٱلسَّعِيرِ
கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
அன்றி, ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. அன்றி, செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்). ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௨)
Tafseer
௧௩

يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَاۤءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍۗ اِعْمَلُوْٓا اٰلَ دَاوٗدَ شُكْرًا ۗوَقَلِيْلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُوْرُ ١٣

yaʿmalūna
يَعْمَلُونَ
அவை செய்கின்றன
lahu
لَهُۥ
அவருக்கு
mā yashāu
مَا يَشَآءُ
அவர் நாடுகின்ற(தை)
min maḥārība
مِن مَّحَٰرِيبَ
தொழுமிடங்களை(யும்)
watamāthīla
وَتَمَٰثِيلَ
சிலைகளையும்
wajifānin
وَجِفَانٍ
பாத்திரங்களையும்
kal-jawābi
كَٱلْجَوَابِ
நீர் தொட்டிகளைப் போன்ற
waqudūrin
وَقُدُورٍ
சட்டிகளையும்
rāsiyātin
رَّاسِيَٰتٍۚ
உறுதியான
iʿ'malū
ٱعْمَلُوٓا۟
செய்யுங்கள்
āla
ءَالَ
குடும்பத்தார்களே!
dāwūda
دَاوُۥدَ
தாவூதின்
shuk'ran
شُكْرًاۚ
நன்றி செலுத்துவதற்காக
waqalīlun
وَقَلِيلٌ
குறைவானவர்களே
min ʿibādiya
مِّنْ عِبَادِىَ
என் அடியார்களில்
l-shakūru
ٱلشَّكُورُ
நன்றி செலுத்துபவர்கள்
அ(ன்றி, ஜின் ஆகிய)வைகள் ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) "தேகு" (சமையல் பாத்திரங்)களையும் செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) "தாவூதுடைய சந்ததிகளே! இவைகளுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்" (என்று கட்டளையிட்டோம்). எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கின்றார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௩)
Tafseer
௧௪

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰى مَوْتِهٖٓ اِلَّا دَاۤبَّةُ الْاَرْضِ تَأْكُلُ مِنْسَاَتَهٗ ۚفَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ الْغَيْبَ مَا لَبِثُوْا فِى الْعَذَابِ الْمُهِيْنِۗ ١٤

falammā qaḍaynā
فَلَمَّا قَضَيْنَا
நாம் முடிவு செய்தபோது
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை
mā dallahum
مَا دَلَّهُمْ
அவர்களுக்கு அறிவிக்கவில்லை
ʿalā mawtihi
عَلَىٰ مَوْتِهِۦٓ
அவர் மரணித்து விட்டதை
illā
إِلَّا
தவிர
dābbatu l-arḍi
دَآبَّةُ ٱلْأَرْضِ
கரையானை
takulu
تَأْكُلُ
தின்ற(து)
minsa-atahu
مِنسَأَتَهُۥۖ
அவருடைய தடியை
falammā kharra
فَلَمَّا خَرَّ
அவர் கீழே விழுந்தபோது
tabayyanati
تَبَيَّنَتِ
தெளிவாக தெரிய வந்தது
l-jinu
ٱلْجِنُّ
ஜின்களுக்கு
an law kānū yaʿlamūna
أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ
தாங்கள் அறிந்துகொண்டிருந்தால்
l-ghayba
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
mā labithū
مَا لَبِثُوا۟
தங்கி இருந்திருக்க மாட்டார்கள்
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
l-muhīni
ٱلْمُهِينِ
இழிவான
ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்துவிட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்துவிட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக்கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தரித்திருக்கமாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௪)
Tafseer
௧௫

لَقَدْ كَانَ لِسَبَاٍ فِيْ مَسْكَنِهِمْ اٰيَةٌ ۚجَنَّتٰنِ عَنْ يَّمِيْنٍ وَّشِمَالٍ ەۗ كُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ ۗبَلْدَةٌ طَيِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ ١٥

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
kāna
كَانَ
இருக்கின்றது
lisaba-in
لِسَبَإٍ
சபா நகர மக்களுக்கு
fī maskanihim
فِى مَسْكَنِهِمْ
அவர்களின் தங்குமிடத்தில்
āyatun
ءَايَةٌۖ
ஓர் அத்தாட்சி
jannatāni
جَنَّتَانِ
இரண்டு தோட்டங்கள்
ʿan yamīnin
عَن يَمِينٍ
வலது பக்கத்திலும்
washimālin
وَشِمَالٍۖ
இடது பக்கத்திலும்
kulū
كُلُوا۟
உண்ணுங்கள்!
min riz'qi
مِن رِّزْقِ
உணவை
rabbikum
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
wa-ush'kurū
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
lahu
لَهُۥۚ
அவனுக்கு
baldatun ṭayyibatun
بَلْدَةٌ طَيِّبَةٌ
நல்ல ஊர்
warabbun
وَرَبٌّ
இன்னும் இறைவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
மெய்யாகவே "ஸபா"வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. "உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவைகளைப் புசித்துக்கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு" (எனவும் கூறப்பட்டது). ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௫)
Tafseer
௧௬

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَيْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ ١٦

fa-aʿraḍū
فَأَعْرَضُوا۟
ஆனால் புறக்கணித்தனர்
fa-arsalnā
فَأَرْسَلْنَا
ஆகவே அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sayla
سَيْلَ
பெரும் வெள்ளத்தை
l-ʿarimi
ٱلْعَرِمِ
அடியோடு அரித்து செல்கின்ற
wabaddalnāhum
وَبَدَّلْنَٰهُم
இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு
bijannatayhim
بِجَنَّتَيْهِمْ
அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக
jannatayni
جَنَّتَيْنِ
இரண்டு தோட்டங்களை
dhawātay
ذَوَاتَىْ
உடைய
ukulin
أُكُلٍ
பழங்கள்
khamṭin
خَمْطٍ
துர்நாற்றமுள்ள
wa-athlin
وَأَثْلٍ
இன்னும் காய்க்காத மரங்கள்
washayin min sid'rin qalīlin
وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை
எனினும், அவர்கள் (அதனைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தான தொரு ஏரியை உடைக்கக் கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பி வைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களையும், சில இலந்தை மரங்களையும் கொண்ட தோப்புகளாக மாற்றிவிட்டோம். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௬)
Tafseer
௧௭

ذٰلِكَ جَزَيْنٰهُمْ بِمَا كَفَرُوْاۗ وَهَلْ نُجٰزِيْٓ اِلَّا الْكَفُوْرَ ١٧

dhālika
ذَٰلِكَ
இது
jazaynāhum
جَزَيْنَٰهُم
அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம்
bimā kafarū
بِمَا كَفَرُوا۟ۖ
அவர்கள் நிராகரித்ததற்காக
wahal nujāzī
وَهَلْ نُجَٰزِىٓ
மற்றவர்களையா நாம் தண்டிப்போம்
illā
إِلَّا
தவிர
l-kafūra
ٱلْكَفُورَ
நிராகரிப்பாளர்களை
நம்முடைய நன்றியை மறந்ததற்கு இதனை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர் களுக்கன்றி (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா? ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௭)
Tafseer
௧௮

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِيْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَۗ سِيْرُوْا فِيْهَا لَيَالِيَ وَاَيَّامًا اٰمِنِيْنَ ١٨

wajaʿalnā
وَجَعَلْنَا
நாம் ஏற்படுத்தினோம்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு இடையிலும்
wabayna
وَبَيْنَ
இடையிலும்
l-qurā
ٱلْقُرَى
ஊர்களுக்கு
allatī bāraknā
ٱلَّتِى بَٰرَكْنَا
நாம் அருள்வளம் புரிந்த
fīhā
فِيهَا
அவற்றில்
quran
قُرًى
பல ஊர்களை
ẓāhiratan
ظَٰهِرَةً
தெளிவாகத் தெரியும்படியான
waqaddarnā
وَقَدَّرْنَا
நிர்ணயித்தோம்
fīhā
فِيهَا
அவற்றில்
l-sayra
ٱلسَّيْرَۖ
பயணத்தை
sīrū
سِيرُوا۟
பயணியுங்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
layāliya
لَيَالِىَ
பல இரவுகளும்
wa-ayyāman
وَأَيَّامًا
பல பகல்களும்
āminīna
ءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களாக
அவர்களுடைய ஊருக்கும் நாம் அருள்புரிந்த (ஸிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவைகளில் பாதைகளையும் அமைத்து "இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறியிருந்தோம்). ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௮)
Tafseer
௧௯

فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَيْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ١٩

faqālū
فَقَالُوا۟
ஆனால் அவர்கள் கூறினர்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா!
bāʿid
بَٰعِدْ
தூரத்தை ஏற்படுத்து!
bayna
بَيْنَ
மத்தியில்
asfārinā
أَسْفَارِنَا
எங்கள் பயணங்களுக்கு
waẓalamū
وَظَلَمُوٓا۟
இன்னும் அநீதி இழைத்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்குத் தாமே
fajaʿalnāhum
فَجَعَلْنَٰهُمْ
ஆகவே, அவர்களை ஆக்கிவிட்டோம்
aḥādītha
أَحَادِيثَ
பேசப்படக்கூடிய கதைகளாக
wamazzaqnāhum
وَمَزَّقْنَٰهُمْ
அவர்களை கிழித்துவிட்டோம்
kulla mumazzaqin
كُلَّ مُمَزَّقٍۚ
சுக்கு நூறாக
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
likulli
لِّكُلِّ
எல்லோருக்கும்
ṣabbārin
صَبَّارٍ
பெரும் பொறுமையாளர்(கள்)
shakūrin
شَكُورٍ
அதிகம் நன்றி செலுத்துகின்றவர்(கள்)
ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து "தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்துவிடு)வாயாக!" என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசக்கூடிய கதைகளாக்கி விட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௯)
Tafseer
௨௦

وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ اِبْلِيْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ ٢٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ṣaddaqa
صَدَّقَ
உண்மையாக்கினான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ib'līsu
إِبْلِيسُ
இப்லீஸ்
ẓannahu
ظَنَّهُۥ
தன் எண்ணத்தை
fa-ittabaʿūhu
فَٱتَّبَعُوهُ
ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர்
illā
إِلَّا
தவிர
farīqan
فَرِيقًا
பிரிவினரை
mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கைகொண்டவர்கள்
நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர (மற்ற) அவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨௦)
Tafseer