Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸபா - Word by Word

Saba

(Sabaʾ)

bismillaahirrahmaanirrahiim

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَلَهُ الْحَمْدُ فِى الْاٰخِرَةِۗ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ ١

al-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே!
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
lahu
لَهُۥ
அவனுக்கே உரியன
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவையும்
walahu
وَلَهُ
அவனுக்கே
l-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِۚ
மறுமையிலும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகாஞானமுடையவன்
l-khabīru
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்
புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன் ஞானமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧)
Tafseer

يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاۤءِ وَمَا يَعْرُجُ فِيْهَاۗ وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ ٢

yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
mā yaliju
مَا يَلِجُ
நுழைவதை(யும்)
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā yakhruju
وَمَا يَخْرُجُ
வெளியேறுவதையும்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
wamā yanzilu
وَمَا يَنزِلُ
இறங்குவதையும்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
wamā yaʿruju
وَمَا يَعْرُجُ
ஏறுவதையும்
fīhā
فِيهَاۚ
அதில்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வைகளையும், அதில் இருந்து வெளிப்படும் (மரம் செடி ஆகிய) இவைகளையும் வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், அதன் பக்கம் ஏறுகின்றவை களையும் அவன் நன்கறிவான். அவன் மகா கிருபையுடையவனும் மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கிறான். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௨)
Tafseer

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَأْتِيْنَا السَّاعَةُ ۗقُلْ بَلٰى وَرَبِّيْ لَتَأْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِۙ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَآ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَآ اَكْبَرُ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍۙ ٣

waqāla
وَقَالَ
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
lā tatīnā
لَا تَأْتِينَا
எங்களிடம் வராது
l-sāʿatu
ٱلسَّاعَةُۖ
மறுமை
qul
قُلْ
கூறுவீராக!
balā
بَلَىٰ
ஏன் (வராது)
warabbī
وَرَبِّى
என் இறைவன் மீது சத்தியமாக
latatiyannakum
لَتَأْتِيَنَّكُمْ
நிச்சயமாக அது உங்களிடம் வரும்
ʿālimi
عَٰلِمِ
நன்கறிந்தவனாகிய
l-ghaybi
ٱلْغَيْبِۖ
மறைவானவற்றை
lā yaʿzubu
لَا يَعْزُبُ
எதுவும் மறைந்துவிடாது
ʿanhu
عَنْهُ
அவனை விட்டும்
mith'qālu
مِثْقَالُ
அளவும்
dharratin
ذَرَّةٍ
அணு
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِ
பூமியிலும்
walā aṣgharu
وَلَآ أَصْغَرُ
சிறியது இல்லை
min dhālika
مِن ذَٰلِكَ
அதை விட
walā akbaru
وَلَآ أَكْبَرُ
பெரியது இல்லை
illā
إِلَّا
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
பதிவேட்டில் இருந்தே
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(எனினும்) "மறுமை நமக்கு வராது" என்று இந்நிராகரிப் பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அது வரும். என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும். என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் "லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை." ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௩)
Tafseer

لِّيَجْزِيَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۗ اُولٰۤىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ٤

liyajziya
لِّيَجْزِىَ
அவன் கூலிகொடுப்பதற்காக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِۚ
நன்மைகளை
ulāika lahum
أُو۟لَٰٓئِكَ لَهُم
அவர்களுக்கு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு(ம்)
wariz'qun
وَرِزْقٌ
வாழ்க்கையும்
karīmun
كَرِيمٌ
கண்ணியமான
நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௪)
Tafseer

وَالَّذِيْنَ سَعَوْ فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ ٥

wa-alladhīna saʿaw
وَٱلَّذِينَ سَعَوْ
முயற்சிப்பவர்கள்
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
muʿājizīna
مُعَٰجِزِينَ
அவர்கள் முறியடிப்பதற்காக
ulāika lahum
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை உண்டு
min rij'zin
مِّن رِّجْزٍ
கெட்ட தண்டனையின்
alīmun
أَلِيمٌ
மிகவும் வலிமிக்க
எவர்கள் நம்முடைய வசனங்களுக்கு எதிரிடையாக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கின்றார்களோ அத்தகையவர் களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௫)
Tafseer

وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِيْٓ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّۙ وَيَهْدِيْٓ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ ٦

wayarā
وَيَرَى
அறிவார்கள்
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி
alladhī unzila
ٱلَّذِىٓ أُنزِلَ
இறக்கப்பட்டதை
ilayka
إِلَيْكَ
உமக்கு
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
huwa
هُوَ
அதுதான்
l-ḥaqa
ٱلْحَقَّ
சத்தியம்
wayahdī
وَيَهْدِىٓ
இன்னும் நேர்வழி காட்டுகிறது
ilā ṣirāṭi
إِلَىٰ صِرَٰطِ
பாதைக்கு
l-ʿazīzi l-ḥamīdi
ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்
(நபியே!) எவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்டதோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்)கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை உங்கள் இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதமென்றும், அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக் கூடியது என்றே எண்ணுவார்கள். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௬)
Tafseer

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا هَلْ نَدُلُّكُمْ عَلٰى رَجُلٍ يُّنَبِّئُكُمْ اِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍۙ اِنَّكُمْ لَفِيْ خَلْقٍ جَدِيْدٍۚ ٧

waqāla
وَقَالَ
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
hal nadullukum
هَلْ نَدُلُّكُمْ
நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?
ʿalā rajulin
عَلَىٰ رَجُلٍ
ஓர் ஆடவரை
yunabbi-ukum
يُنَبِّئُكُمْ
அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார்
idhā muzziq'tum
إِذَا مُزِّقْتُمْ
நீங்கள் கிழிக்கப்பட்ட பின்னர்
kulla mumazzaqin
كُلَّ مُمَزَّقٍ
சுக்கு நூறாக
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
lafī khalqin
لَفِى خَلْقٍ
படைப்பாக (உருவாக்கப்படுவீர்கள்)
jadīdin
جَدِيدٍ
புதிய
எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின் றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௭)
Tafseer

اَفْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَمْ بِهٖ جِنَّةٌ ۗبَلِ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ فِى الْعَذَابِ وَالضَّلٰلِ الْبَعِيْدِ ٨

aftarā
أَفْتَرَىٰ
அவர் இட்டுக்கட்டுகிறாரா
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்யை
am
أَم
அல்லது
bihi
بِهِۦ
அவருக்கு
jinnatun
جِنَّةٌۢۗ
பைத்தியம் (பிடித்திருக்கிறதா?)
bali
بَلِ
மாறாக
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
வேதனையிலும்
wal-ḍalāli
وَٱلضَّلَٰلِ
வழிகேட்டிலும்
l-baʿīdi
ٱلْبَعِيدِ
தூரமான
அன்றி, (இம்மனிதர்) "அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கொண்டாரோ அல்லது அவருக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறதோ" என்று (அவரிடம் கூறுகின்றனர்.) அவ்வாறன்று. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள் தாம் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௮)
Tafseer

اَفَلَمْ يَرَوْا اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ اِنْ نَّشَأْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَاۤءِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ ࣖ ٩

afalam yaraw
أَفَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā mā bayna aydīhim
إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ
தங்களுக்கு முன்னுள்ள
wamā khalfahum
وَمَا خَلْفَهُم
இன்னும் தங்களுக்கு பின்னுள்ள
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்தையும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியையும்
in nasha
إِن نَّشَأْ
நாம் நாடினால்
nakhsif
نَخْسِفْ
சொருகிவிடுவோம்
bihimu
بِهِمُ
அவர்களை
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
aw
أَوْ
அல்லது
nus'qiṭ
نُسْقِطْ
விழவைப்போம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
kisafan
كِسَفًا
துண்டுகளை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِۚ
வானத்தின்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றது
laāyatan
لَءَايَةً
ஒர் அத்தாட்சி
likulli ʿabdin
لِّكُلِّ عَبْدٍ
எல்லா அடியார்களுக்கும்
munībin
مُّنِيبٍ
திரும்பக்கூடிய
வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவைகளை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௯)
Tafseer
௧௦

۞ وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًاۗ يٰجِبَالُ اَوِّبِيْ مَعَهٗ وَالطَّيْرَ ۚوَاَلَنَّا لَهُ الْحَدِيْدَۙ ١٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
வழங்கினோம்
dāwūda
دَاوُۥدَ
தாவூதுக்கு
minnā
مِنَّا
நம் புறத்தில் இருந்து
faḍlan
فَضْلًاۖ
மேன்மையை
yājibālu
يَٰجِبَالُ
மலைகளே!
awwibī
أَوِّبِى
நீங்கள் துதியுங்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
wal-ṭayra
وَٱلطَّيْرَۖ
பறவைகளே!
wa-alannā
وَأَلَنَّا
இன்னும் மென்மையாக்கினோம்
lahu
لَهُ
அவருக்கு
l-ḥadīda
ٱلْحَدِيدَ
இரும்பை
மெய்யாகவே நாம் தாவூதுக்குப் பெரும் அருள்புரிந்து மலைகளை நோக்கி "நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். அவ்வாறே பறவைகளுக்கும் (கட்டளையிட்டோம். அன்றி,) அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மெதுவாக்கித் தந்தோம். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௧௦)
Tafseer