Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௯

Qur'an Surah Al-Ahzab Verse 9

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَاۤءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ۗوَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًاۚ (الأحزاب : ٣٣)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
udh'kurū
ٱذْكُرُوا۟
Remember
நினைத்துப் பாருங்கள்
niʿ'mata
نِعْمَةَ
(the) Favor
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீதுள்ள
idh jāatkum
إِذْ جَآءَتْكُمْ
when came to you
உங்களிடம்வந்தபோது
junūdun
جُنُودٌ
(the) hosts
பல ராணுவங்கள்
fa-arsalnā
فَأَرْسَلْنَا
and We sent
நாம் அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்களுக்கு எதிராக
rīḥan
رِيحًا
a wind
காற்றை(யும்)
wajunūdan
وَجُنُودًا
and hosts
ராணுவங்களையும்
lam tarawhā
لَّمْ تَرَوْهَاۚ
not you (could) see them
நீங்கள் பார்க்கவில்லை/ அவர்களை
wakāna
وَكَانَ
And Allah is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
And Allah is
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்வதை
baṣīran
بَصِيرًا
All-Seer
உற்று நோக்கியவனாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanuz kuroo ni'matal laahi 'alaikum iz jaaa'atkm junoodun fa arsalnaa 'alaihim reehanw wa junoodal lam tarawhaa; wa kaanal laahu bimaa ta'maloona Baseera (QS. al-ʾAḥzāb:9)

English Sahih International:

O you who have believed, remember the favor of Allah upon you when armies came to [attack] you and We sent upon them a wind and armies [of angels] you did not see. And ever is Allah, of what you do, Seeing. (QS. Al-Ahzab, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருந்தான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௯)

Jan Trust Foundation

முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். பல ராணுவங்கள் (உங்களை தாக்குவதற்கு) உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக காற்றையும் நீங்கள் பார்க்காத ராணுவங்களையும் நாம் அனுப்பினோம். அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.