Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௮

Qur'an Surah Al-Ahzab Verse 8

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّيَسْـَٔلَ الصّٰدِقِيْنَ عَنْ صِدْقِهِمْ ۚوَاَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا اَلِيْمًا ࣖ (الأحزاب : ٣٣)

liyasala
لِّيَسْـَٔلَ
That He may ask
விசாரிப்பதற்காக
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
the truthful
உண்மையாளர்களை
ʿan ṣid'qihim
عَن صِدْقِهِمْۚ
about their truth
அவர்களின் உண்மையைப் பற்றி
wa-aʿadda
وَأَعَدَّ
And He has prepared
ஏற்படுத்திஇருக்கிறான்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
for the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
தண்டனையை
alīman
أَلِيمًا
painful
வலிமிகுந்த(து)

Transliteration:

Liyas'alas saadiqeena 'an sidqihim; wa a'adda lilkaa fireena 'azaaban aleemaa (QS. al-ʾAḥzāb:8)

English Sahih International:

That He may question the truthful about their truth. And He has prepared for the disbelievers a painful punishment. (QS. Al-Ahzab, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (இறைவன்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௮)

Jan Trust Foundation

எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினர், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக (நபிமார்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம்). நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்.