Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௭௩

Qur'an Surah Al-Ahzab Verse 73

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقَتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ (الأحزاب : ٣٣)

liyuʿadhiba
لِّيُعَذِّبَ
So that Allah may punish
வேதனை செய்வதற்காக
l-lahu
ٱللَّهُ
So that Allah may punish
அல்லாஹ்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
the hypocrite men
நயவஞ்சகமுடைய ஆண்களை(யும்)
wal-munāfiqāti
وَٱلْمُنَٰفِقَٰتِ
and the hypocrite women
நயவஞ்சகமுடைய பெண்களையும்
wal-mush'rikīna
وَٱلْمُشْرِكِينَ
and the polytheist men
இணைவைக்கின்ற ஆண்களையும்
wal-mush'rikāti
وَٱلْمُشْرِكَٰتِ
and the polytheist women
இணைவைக்கின்ற பெண்களையும்
wayatūba
وَيَتُوبَ
and Allah will turn (in Mercy)
மன்னிப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
and Allah will turn (in Mercy)
அல்லாஹ்
ʿalā l-mu'minīna
عَلَى ٱلْمُؤْمِنِينَ
to the believing men
நம்பிக்கை கொண்ட ஆண்களை
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِۗ
and the believing women
நம்பிக்கை கொண்ட பெண்களை
wakāna
وَكَانَ
And Allah is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
And Allah is
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًۢا
Most Merciful
பெரும் கருணையாளனாக

Transliteration:

Liyu 'azzibal laahul munaafiqeena wal munaafiqaati walmushrikeena wal mushrikaati wa yatoobal laahu 'alal mu'mineena walmu'minaat; wa kaanal laahu Ghafoorar Raheema (QS. al-ʾAḥzāb:73)

English Sahih International:

[It was] so that Allah may punish the hypocrite men and hypocrite women and the men and women who associate others with Him and that Allah may accept repentance from the believing men and believing women. And ever is Allah Forgiving and Merciful. (QS. Al-Ahzab, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பி விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௭௩)

Jan Trust Foundation

எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் அவனது கட்டளைகளை கொடுத்து சோதிக்கின்றான்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...