குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬௯
Qur'an Surah Al-Ahzab Verse 69
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ اٰذَوْا مُوْسٰى فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ۗوَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيْهًا ۗ (الأحزاب : ٣٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- lā takūnū
- لَا تَكُونُوا۟
- (Do) not be
- நீங்கள் ஆகிவிடாதீர்கள்
- ka-alladhīna ādhaw
- كَٱلَّذِينَ ءَاذَوْا۟
- like those who annoyed
- தொந்தரவு தந்தவர்களைப் போன்று
- mūsā
- مُوسَىٰ
- Musa
- மூஸாவிற்கு
- fabarra-ahu
- فَبَرَّأَهُ
- then Allah cleared him
- அவரை நிரபராதியாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- then Allah cleared him
- அல்லாஹ்
- mimmā qālū
- مِمَّا قَالُوا۟ۚ
- of what they said
- அவர்கள் கூறியதிலிருந்து
- wakāna
- وَكَانَ
- And he was
- அவர் இருந்தார்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- near Allah
- அல்லாஹ்விடம்
- wajīhan
- وَجِيهًا
- honorable
- மிகசிறப்பிற்குரியவராக
Transliteration:
yaa aiyuhal lazeena aamanoo las takoonoo kalla zeena aazaw Moosaa fa barra ahul laahu mimmmaa qaaloo; wa kaana 'indal laahi wajeehaa(QS. al-ʾAḥzāb:69)
English Sahih International:
O you who have believed, be not like those who abused Moses; then Allah cleared him of what they said. And he, in the sight of Allah, was distinguished. (QS. Al-Ahzab, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! மூஸாவை(ப் பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை)த் துன்புறுத்திய மக்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் கூறிய அவதூற்றிலிருந்து மூஸாவை அல்லாஹ் பரிசுத்தமாக்கி விட்டான். அவர் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவராகவே இருந்தார். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬௯)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! மூசாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக சிறப்பிற்குரியவராக இருந்தார்.