Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬

Qur'an Surah Al-Ahzab Verse 6

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلنَّبِيُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗٓ اُمَّهٰتُهُمْ ۗوَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِيْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّآ اَنْ تَفْعَلُوْٓا اِلٰٓى اَوْلِيَاۤىِٕكُمْ مَّعْرُوْفًا ۗ كَانَ ذٰلِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا (الأحزاب : ٣٣)

al-nabiyu
ٱلنَّبِىُّ
The Prophet
நபிதான்
awlā
أَوْلَىٰ
(is) closer
மிக உரிமையாளர்
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
to the believers
நம்பிக்கையாளர்களுக்கு
min anfusihim
مِنْ أَنفُسِهِمْۖ
than their own selves
அவர்களின் ஆன்மாக்களைவிட
wa-azwājuhu
وَأَزْوَٰجُهُۥٓ
and his wives
இன்னும் அவருடைய மனைவிமார்கள்
ummahātuhum
أُمَّهَٰتُهُمْۗ
(are) their mothers
அவர்களுக்கு தாய்மார்கள்
wa-ulū l-arḥāmi
وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
And possessors (of) relationships
இன்னும் இரத்தபந்தங்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
அவர்களில் சிலர்
awlā
أَوْلَىٰ
(are) closer
உரிமையுள்ளவர்கள்
bibaʿḍin
بِبَعْضٍ
to another
சிலருக்கு
fī kitābi
فِى كِتَٰبِ
in (the) Decree
வேதத்தின் படி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
than the believers
நம்பிக்கையாளர்களை(யும்) விட
wal-muhājirīna
وَٱلْمُهَٰجِرِينَ
and the emigrants
முஹாஜிர்களையும்
illā
إِلَّآ
except
தவிர
an tafʿalū
أَن تَفْعَلُوٓا۟
that you do
நீங்கள்ஏதும்செய்தால்
ilā awliyāikum
إِلَىٰٓ أَوْلِيَآئِكُم
to your friends
உங்கள் பொறுப்பாளர்களுக்கு
maʿrūfan
مَّعْرُوفًاۚ
a kindness
ஒரு நன்மையை
kāna
كَانَ
That is
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
That is
இது
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
வேதத்தில்
masṭūran
مَسْطُورًا
written
எழுதப்பட்டதாக

Transliteration:

An-Nabiyyu awlaa bil mu'mineena min anfusihim wa azwaajuhoo ummahatuhum wa ulul arbaami ba'duhum awlaa biba'din fee Kitaabil laahi minal mu'meneena wal Muhaajireena illaaa an taf'alooo ilaaa awliyaaa'ikum ma'roofaa; kaana zaalika fil kitaabi mastooraa (QS. al-ʾAḥzāb:6)

English Sahih International:

The Prophet is more worthy of the believers than themselves, and his wives are [in the position of] their mothers. And those of [blood] relationship are more entitled [to inheritance] in the decree of Allah than the [other] believers and the emigrants, except that you may do to your close associates a kindness [through bequest]. That was in the Book inscribed. (QS. Al-Ahzab, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களை விடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தாம் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் சிநேகிதர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக் கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬)

Jan Trust Foundation

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆன்மாக்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்தபந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் பொறுப்பாளர்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கின்றது.