Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௮

Qur'an Surah Al-Ahzab Verse 58

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا ࣖ (الأحزاب : ٣٣)

wa-alladhīna yu'dhūna
وَٱلَّذِينَ يُؤْذُونَ
And those who harm
தொந்தரவு தருபவர்கள்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believing men
முஃமினான ஆண்களுக்கு(ம்)
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
and the believing women
முஃமினான பெண்களுக்கும்
bighayri mā ik'tasabū
بِغَيْرِ مَا ٱكْتَسَبُوا۟
for other than what they have earned
அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு
faqadi
فَقَدِ
then certainly
திட்டமாக
iḥ'tamalū
ٱحْتَمَلُوا۟
they bear
சுமந்துகொண்டார்கள்
buh'tānan
بُهْتَٰنًا
false accusation
அபாண்டமான பழியை(யும்)
wa-ith'man
وَإِثْمًا
and sin
பாவத்தையும்
mubīnan
مُّبِينًا
manifest
தெளிவான

Transliteration:

Wallazeena yu'zoonal mu'mineena almu'manaati bighairi mak tasaboo faqadih tamaloo buhtaananw wa ismam mubeenaa (QS. al-ʾAḥzāb:58)

English Sahih International:

And those who harm believing men and believing women for [something] other than what they have earned [i.e., deserved] have certainly borne upon themselves a slander and manifest sin. (QS. Al-Ahzab, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௫௮)

Jan Trust Foundation

ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு தொந்தரவு தருபவர்கள் அபாண்டமான பழியையும் தெளிவான பாவத்தையும் திட்டமாக (தங்கள் மேல்) சுமந்து கொண்டார்கள்.