Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௫

Qur'an Surah Al-Ahzab Verse 55

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِيْٓ اٰبَاۤىِٕهِنَّ وَلَآ اَبْنَاۤىِٕهِنَّ وَلَآ اِخْوَانِهِنَّ وَلَآ اَبْنَاۤءِ اِخْوَانِهِنَّ وَلَآ اَبْنَاۤءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَاۤىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَيْمَانُهُنَّۚ وَاتَّقِيْنَ اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدًا (الأحزاب : ٣٣)

lā junāḥa
لَّا جُنَاحَ
(There is) no blame
குற்றம் இல்லை
ʿalayhinna
عَلَيْهِنَّ
upon them
அவர்கள் மீது
fī ābāihinna
فِىٓ ءَابَآئِهِنَّ
concerning their fathers
தங்கள் தந்தைமார்கள் விஷயத்தில்
walā abnāihinna
وَلَآ أَبْنَآئِهِنَّ
and not their sons
இன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள்
walā ikh'wānihinna
وَلَآ إِخْوَٰنِهِنَّ
and not their brothers
இன்னும் தங்கள் சகோதரர்கள்
walā abnāi
وَلَآ أَبْنَآءِ
and not sons
இன்னும் ஆண் பிள்ளைகள்
ikh'wānihinna
إِخْوَٰنِهِنَّ
(of) their brothers
தங்கள் சகோதரர்களின்
walā abnāi
وَلَآ أَبْنَآءِ
and not sons
இன்னும் ஆண் பிள்ளைகள்
akhawātihinna
أَخَوَٰتِهِنَّ
(of) their sisters
தங்கள் சகோதரிகளின்
walā nisāihinna
وَلَا نِسَآئِهِنَّ
and not their women
இன்னும் தங்கள் பெண்கள்
walā mā malakat
وَلَا مَا مَلَكَتْ
and not what they rightfully possess
இன்னும் சொந்தமாக்கியவர்கள்
aymānuhunna
أَيْمَٰنُهُنَّۗ
they rightfully possess
தங்கள் வலக்கரங்கள்
wa-ittaqīna
وَٱتَّقِينَ
And fear
பயந்து கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَۚ
Allah
அல்லாஹ்வை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
over all things
எல்லாவற்றையும்
shahīdan
شَهِيدًا
a Witness
நன்கு பார்த்தவனாக

Transliteration:

Laa junaaha 'alaihinna feee aabaaa'ihinna wa laaa abnaaa'ihinna wa laaa ikhwaanihinnna wa laaa abnaaa'i ikhwaanihinna wa laaa abnaaa'i akhawaatihinna wa laa nisaaa'i hinna wa laa Maa malakat aimaanuhunn; wattaqeenal laah; innal laaha kaana 'alaa kulli shai'in Shaheedaa (QS. al-ʾAḥzāb:55)

English Sahih International:

There is no blame upon them [i.e., women] concerning their fathers or their sons or their brothers or their brothers' sons or their sisters' sons or their women or those their right hands possess [i.e., slaves]. And fear Allah. Indeed Allah is ever, over all things, Witness. (QS. Al-Ahzab, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

நபியுடைய மனைவிகள் தங்களுடைய தந்தைகள் முன்பாகவும், தங்கள் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்கள் முன்பாகவும், தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் முன்பாகவும், தங்கள் (போன்ற நம்பிக்கையாளர்களான) பெண்கள் முன்பாகவும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் முன்பாகவும் (வருவதில்) அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை. (இவர்களைத் தவிர மற்றவர்கள் முன் வருவதைப் பற்றி நபியுடைய மனைவிகளே!) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் பார்த்தவனாகவே இருக்கிறான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௫௫)

Jan Trust Foundation

(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது (நபியின் மனைவிகள் மீதும் முஃமினான பெண்கள் மீதும்) தங்கள் தந்தைமார்கள், தங்கள் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகள், தங்கள் (முஃமினான) பெண்கள், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-அவர்கள் முன் பர்தா இன்றி இருப்பதில்) குற்றம் இல்லை. (பெண்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு பார்த்தவனாக இருக்கின்றான்.