Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫

Qur'an Surah Al-Ahzab Verse 5

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُدْعُوْهُمْ لِاٰبَاۤىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْٓا اٰبَاۤءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْ ۗوَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَآ اَخْطَأْتُمْ بِهٖ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا (الأحزاب : ٣٣)

id'ʿūhum
ٱدْعُوهُمْ
Call them
அழையுங்கள்! அவர்களை
liābāihim
لِءَابَآئِهِمْ
by their fathers
அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே)
huwa
هُوَ
it
அதுதான்
aqsaṭu
أَقْسَطُ
(is) more just
மிக நீதமானது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
near Allah
அல்லாஹ்விடம்
fa-in lam taʿlamū
فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟
But if not you know
நீங்கள் அறியவில்லை என்றால்
ābāahum
ءَابَآءَهُمْ
their fathers
தந்தைகளை அவர்களின்
fa-ikh'wānukum
فَإِخْوَٰنُكُمْ
then (they are) your brothers
உங்கள் சகோதரர்கள்
fī l-dīni
فِى ٱلدِّينِ
in [the] religion
மார்க்கத்தில்
wamawālīkum
وَمَوَٰلِيكُمْۚ
and your friends
இன்னும் உங்கள் உதவியாளர்கள்
walaysa
وَلَيْسَ
But not is
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
any blame
குற்றம்
fīmā
فِيمَآ
in what
எதில்
akhṭatum
أَخْطَأْتُم
you made a mistake
நீங்கள் தவறு செய்தீர்களோ
bihi
بِهِۦ
in it
அதில்
walākin
وَلَٰكِن
but
என்றாலும்
مَّا
what
எதை
taʿammadat
تَعَمَّدَتْ
intended
வேண்டுமென்று செய்தது
qulūbukum
قُلُوبُكُمْۚ
your hearts
உங்கள் உள்ளங்கள்
wakāna
وَكَانَ
And Allah
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful
மகா கருணையாளனாக

Transliteration:

Ud'oohum li aabaaa'ihim huwa aqsatu 'indal laah; fa illam ta'lamooo aabaaa'ahum fa ikhwaanukum fid deeni wa mawaaleekum; wa laisa 'alaikum junaahun feemaaa akhtaatum bihee wa laakim maa ta'ammadat quloobukum; wa kaanal laahu Ghafoorar Raheemaa (QS. al-ʾAḥzāb:5)

English Sahih International:

Call them by [the names of] their fathers; it is more just in the sight of Allah. But if you do not know their fathers – then they are [still] your brothers in religion and those entrusted to you. And there is no blame upon you for that in which you have erred but [only for] what your hearts intended. And ever is Allah Forgiving and Merciful. (QS. Al-Ahzab, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது சிநேகிதரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. எனினும், (இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலோ (அது உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௫)

Jan Trust Foundation

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே) அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானது. நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எதை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று செய்ததோ (அதுதான் குற்றம் ஆகும்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கின்றான்.