குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௯
Qur'an Surah Al-Ahzab Verse 49
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَاۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا (الأحزاب : ٣٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- idhā nakaḥtumu
- إِذَا نَكَحْتُمُ
- When you marry
- நீங்கள் திருமணம் முடித்தால்
- l-mu'mināti
- ٱلْمُؤْمِنَٰتِ
- believing women
- நம்பிக்கைகொண்ட பெண்களை
- thumma
- ثُمَّ
- and then
- பிறகு
- ṭallaqtumūhunna
- طَلَّقْتُمُوهُنَّ
- divorce them
- அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால்
- min qabli
- مِن قَبْلِ
- before before
- முன்னர்
- an
- أَن
- [that]
- நீங்கள் உறவு வைப்பதற்கு
- tamassūhunna
- تَمَسُّوهُنَّ
- you have touched them
- நீங்கள் உறவு வைப்பதற்கு அவர்களுடன்
- famā lakum
- فَمَا لَكُمْ
- then not for you
- உங்களுக்கு இல்லை
- ʿalayhinna
- عَلَيْهِنَّ
- on them
- அவர்கள் மீது
- min ʿiddatin
- مِنْ عِدَّةٍ
- any waiting period
- எவ்வித இத்தாவும்
- taʿtaddūnahā
- تَعْتَدُّونَهَاۖ
- (to) count concerning them
- நீங்கள் அதைக் கணக்கிட வேண்டிய
- famattiʿūhunna
- فَمَتِّعُوهُنَّ
- So provide for them
- செல்வத்தை கொடுங்கள்! அவர்களுக்கு
- wasarriḥūhunna
- وَسَرِّحُوهُنَّ
- and release them
- இன்னும் விடுவித்து விடுங்கள் அவர்களை
- sarāḥan
- سَرَاحًا
- (with) a release
- விடுவித்தல்
- jamīlan
- جَمِيلًا
- good
- அழகிய முறையில்
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanooo izaa nakahtumul mu'minaati summa tallaqtu moohunna min qabli an tamas soohunna famaa lakum 'alaihinna min 'iddatin ta'taddoonahaa famatti'oohunna wa sarri hoohunna saraahan jameelaa(QS. al-ʾAḥzāb:49)
English Sahih International:
O you who have believed, when you marry believing women and then divorce them before you have touched them [i.e., consummated the marriage], then there is not for you any waiting period to count concerning them. So provide for them and give them a gracious release. (QS. Al-Ahzab, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே "தலாக்"குக் கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்க வேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௯)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய எவ்வித இத்தாவும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. அவர்களுக்கு செல்வத்தை கொடுங்கள்! அழகியமுறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.