Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௦

Qur'an Surah Al-Ahzab Verse 40

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَۗ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ࣖ (الأحزاب : ٣٣)

mā kāna
مَّا كَانَ
Not is
இருக்கவில்லை
muḥammadun
مُحَمَّدٌ
Muhammad
முஹம்மது
abā
أَبَآ
(the) father
தந்தையாக
aḥadin
أَحَدٍ
(of) anyone
ஒருவருக்கும்
min rijālikum
مِّن رِّجَالِكُمْ
of your men
உங்கள் ஆண்களில்
walākin
وَلَٰكِن
but
என்றாலும்
rasūla
رَّسُولَ
(he is the) Messenger
தூதராகவும்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wakhātama
وَخَاتَمَ
and Seal
இறுதி முத்திரையாகவும்
l-nabiyīna
ٱلنَّبِيِّۦنَۗ
(of) the Prophets
நபிமார்களின்
wakāna
وَكَانَ
And Allah is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
And Allah is
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
ʿalīman
عَلِيمًا
All-Knower
நன்கறிந்தவனாக

Transliteration:

Maa kaana Muhammmadun abaaa ahadim mir rijaalikum wa laakir Rasoolal laahi wa Khaataman Nabiyyeen; wa kaanal laahu bikulli shai'in 'Aleema (QS. al-ʾAḥzāb:40)

English Sahih International:

Muhammad is not the father of [any] one of your men, but [he is] the Messenger of Allah and seal [i.e., last] of the prophets. And ever is Allah, of all things, Knowing. (QS. Al-Ahzab, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௦)

Jan Trust Foundation

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முஹம்மது உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.