Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௩௪

Qur'an Surah Al-Ahzab Verse 34

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِيْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِۗ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا ࣖ (الأحزاب : ٣٣)

wa-udh'kur'na
وَٱذْكُرْنَ
And remember
இன்னும் மனனம் செய்யுங்கள்
mā yut'lā
مَا يُتْلَىٰ
what is recited
ஓதப்படுகின்றவற்றையும்
fī buyūtikunna
فِى بُيُوتِكُنَّ
in your houses
உங்கள் இல்லங்களில்
min āyāti
مِنْ ءَايَٰتِ
of (the) Verses
அதாவது,வசனங்களில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wal-ḥik'mati
وَٱلْحِكْمَةِۚ
and the wisdom
இன்னும் ஞானத்தை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
laṭīfan
لَطِيفًا
All-Subtle
மிக கருணையாளனாக
khabīran
خَبِيرًا
All-Aware
ஆழ்ந்தறிபவனாக

Transliteration:

Wazkurna maa yutlaa fee bu yootikunna min aayaatil laahi wal Hikmah; innal laaha kaana lateefan Khabeera (QS. al-ʾAḥzāb:34)

English Sahih International:

And remember what is recited in your houses of the verses of Allah and wisdom. Indeed, Allah is ever Subtle and Aware. (QS. Al-Ahzab, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞான வாக்கியங்களையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உட்கிருபையுடையவனும், அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௩௪)

Jan Trust Foundation

மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தொழுகையில்) ஓதப்படுகின்றவற்றை அதாவது அல்லாஹ்வின் வசனங்களை இன்னும் ஞானத்தை (-நபியின் பொன்மொழிகளை) உங்கள் இல்லங்களில் மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கின்றான்.