Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௩௩

Qur'an Surah Al-Ahzab Verse 33

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗاِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًاۚ (الأحزاب : ٣٣)

waqarna
وَقَرْنَ
And stay
தங்கியிருங்கள்
fī buyūtikunna
فِى بُيُوتِكُنَّ
in your houses
உங்கள் இல்லங்களில்
walā tabarrajna
وَلَا تَبَرَّجْنَ
and (do) not display yourselves
அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள்
tabarruja
تَبَرُّجَ
(as was the) display
அலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்று
l-jāhiliyati
ٱلْجَٰهِلِيَّةِ
(of the times of) ignorance
அறியாமைக்காலத்தில்
l-ūlā
ٱلْأُولَىٰۖ
the former
முந்திய
wa-aqim'na
وَأَقِمْنَ
And establish
நிலைநிறுத்துங்கள்!
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātīna
وَءَاتِينَ
and give
கொடுங்கள்!
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
ஸகாத்தை
wa-aṭiʿ'na
وَأَطِعْنَ
and obey
கீழ்ப்படியுங்கள்!
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கும்
warasūlahu
وَرَسُولَهُۥٓۚ
and His Messenger
அவனது தூதருக்கும்
innamā yurīdu
إِنَّمَا يُرِيدُ
Only Allah wishes
நாடுவதெல்லாம்
l-lahu
ٱللَّهُ
Allah wishes
அல்லாஹ்
liyudh'hiba
لِيُذْهِبَ
to remove
போக்குவதற்கும்
ʿankumu
عَنكُمُ
from you
உங்களை விட்டும்
l-rij'sa
ٱلرِّجْسَ
the impurity
அசுத்தத்தை
ahla l-bayti
أَهْلَ ٱلْبَيْتِ
(O) People (of) the House!
வீட்டார்களே!
wayuṭahhirakum taṭhīran
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
And to purify you (with thorough) purification
முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்

Transliteration:

Wa qarna fee bu yoo tikunna wa laa tabarrajna tabarrujal Jaahiliyyatil oolaa wa aqimnas Salaata w aaateenaz Zakaata wa ati'nal laaha wa Rasoolah; innamaa yureedul laahu liyuzhiba 'ankumur rijsa Ahlal Bayti wa yutahhirakum tatheeraa (QS. al-ʾAḥzāb:33)

English Sahih International:

And abide in your houses and do not display yourselves as [was] the display of the former times of ignorance. And establish prayer and give Zakah and obey Allah and His Messenger. Allah intends only to remove from you the impurity [of sin], O people of the [Prophet's] household, and to purify you with [extensive] purification. (QS. Al-Ahzab, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று)திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௩௩)

Jan Trust Foundation

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (கண்ணியத்துடன் இருங்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தியது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்.