Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௩௨

Qur'an Surah Al-Ahzab Verse 32

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰنِسَاۤءَ النَّبِيِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَاۤءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِيْ فِيْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًاۚ (الأحزاب : ٣٣)

yānisāa
يَٰنِسَآءَ
O wives
மனைவிகளே!
l-nabiyi
ٱلنَّبِىِّ
(of) the Prophet!
நபியின்
lastunna
لَسْتُنَّ
You are not
நீங்கள் இல்லை
ka-aḥadin
كَأَحَدٍ
like anyone
ஒருவரைப் போன்று
mina l-nisāi
مِّنَ ٱلنِّسَآءِۚ
among the women
பெண்களில்
ini ittaqaytunna
إِنِ ٱتَّقَيْتُنَّ
If you fear (Allah)
நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால்
falā takhḍaʿna bil-qawli
فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ
then (do) not be soft in speech
ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள்
fayaṭmaʿa
فَيَطْمَعَ
lest should be moved with desire
தப்பாசைப்படுவான்
alladhī fī qalbihi
ٱلَّذِى فِى قَلْبِهِۦ
he who in his heart
எவன்/ தனது உள்ளத்தில்
maraḍun
مَرَضٌ
(is) a disease
நோய்
waqul'na
وَقُلْنَ
but say
இன்னும் பேசுங்கள்
qawlan
قَوْلًا
a word
பேச்சை
maʿrūfan
مَّعْرُوفًا
appropriate
சரியான

Transliteration:

Yaa nisaaa'an Nabiyyi lastunna ka ahadim minan nisaaa'i init taqaitunna falaa takhda'na bilqawli fa yatma'al lazee fee qalbihee maradunw wa qulna qawlam ma'roofaa (QS. al-ʾAḥzāb:32)

English Sahih International:

O wives of the Prophet, you are not like anyone among women. If you fear Allah, then do not be soft in speech [to men], lest he in whose heart is disease should covet, but speak with appropriate speech. (QS. Al-Ahzab, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறியபோதிலும்) யதார்த்தவாதிகளைப் போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௩௨)

Jan Trust Foundation

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால். ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள். தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் தப்பாசைப்படுவான். இன்னும் சரியான (முறையான) பேச்சை பேசுங்கள்.