Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௩௧

Qur'an Surah Al-Ahzab Verse 31

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَآ اَجْرَهَا مَرَّتَيْنِۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا (الأحزاب : ٣٣)

waman
وَمَن
And whoever
யார்
yaqnut
يَقْنُتْ
is obedient
பணிந்து நடப்பாரோ
minkunna
مِنكُنَّ
among you
உங்களில்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்வுக்கு(ம்)
warasūlihi
وَرَسُولِهِۦ
and His Messenger
அவனது தூதருக்கும்
wataʿmal
وَتَعْمَلْ
and does
இன்னும் செய்வாரோ
ṣāliḥan
صَٰلِحًا
righteousness
நன்மையை
nu'tihā
نُّؤْتِهَآ
We will give her
அவருக்கு நாம் கொடுப்போம்
ajrahā
أَجْرَهَا
her reward
அவரது கூலியை
marratayni
مَرَّتَيْنِ
twice;
இருமுறை
wa-aʿtadnā lahā
وَأَعْتَدْنَا لَهَا
and We have prepared for her
இன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்
riz'qan
رِزْقًا
a provision
உணவை
karīman
كَرِيمًا
noble
கண்ணியமான

Transliteration:

Wa mai yaqnut minkunna lillaahi wa Rasoolihee wa ta'mal saalihan nu'tihaaa ajrahaa marratayni wa a'tadnaa lahaa rizqan kareema (QS. al-ʾAḥzāb:31)

English Sahih International:

And whoever of you devoutly obeys Allah and His Messenger and does righteousness – We will give her her reward twice; and We have prepared for her a noble provision. (QS. Al-Ahzab, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். அன்றி, மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௩௧)

Jan Trust Foundation

அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பணிந்து நடப்பாரோ, இன்னும் நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான உணவை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்.