Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௭

Qur'an Surah Al-Ahzab Verse 27

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرًا ࣖ (الأحزاب : ٣٣)

wa-awrathakum
وَأَوْرَثَكُمْ
And He caused you to inherit
இன்னும் உங்களுக்கு சொந்தமாக்கினான்
arḍahum
أَرْضَهُمْ
their land
அவர்களின் பூமியை(யும்)
wadiyārahum
وَدِيَٰرَهُمْ
and their houses
இல்லங்களையும் அவர்களின்
wa-amwālahum
وَأَمْوَٰلَهُمْ
and their properties
அவர்களின் செல்வங்களையும்
wa-arḍan
وَأَرْضًا
and a land
இன்னும் ஒரு பூமியையும்
lam taṭaūhā
لَّمْ تَطَـُٔوهَاۚ
not you (had) trodden
நீங்கள் மிதிக்காத
wakāna
وَكَانَ
And Allah is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
And Allah is
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
on every thing
எல்லாவற்றின் மீதும்
qadīran
قَدِيرًا
All-Powerful
பேராற்றலுடையவனாக

Transliteration:

Wa awrasakum ardahum wa diyaarahum wa amwaalahum wa ardal lam tata'oohaa; wa kaanal laahu 'alaa kulli shai'in Qadeeraa (QS. al-ʾAḥzāb:27)

English Sahih International:

And He caused you to inherit their land and their homes and their properties and a land which you have not trodden. And ever is Allah, over all things, competent. (QS. Al-Ahzab, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரையில்) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௭)

Jan Trust Foundation

இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் இன்னும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் உங்களுக்கு சொந்தமாக்கினான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.