Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௬

Qur'an Surah Al-Ahzab Verse 26

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِيْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَأْسِرُوْنَ فَرِيْقًاۚ (الأحزاب : ٣٣)

wa-anzala
وَأَنزَلَ
And He brought down
இறக்கினான்
alladhīna
ٱلَّذِينَ
those who
உதவியவர்களை
ẓāharūhum
ظَٰهَرُوهُم
backed them
உதவியவர்களை அவர்களுக்கு
min
مِّنْ
among
இருந்து
ahli l-kitābi
أَهْلِ ٱلْكِتَٰبِ
(the) People (of) the Scripture
வேதக்காரர்களில்
min ṣayāṣīhim
مِن صَيَاصِيهِمْ
from their fortresses
அவர்களின் கோட்டைகளில் இருந்து
waqadhafa
وَقَذَفَ
and cast
இன்னும் போட்டான்
fī qulūbihimu
فِى قُلُوبِهِمُ
into their hearts
அவர்களின் உள்ளங்களில்
l-ruʿ'ba
ٱلرُّعْبَ
[the] terror
திகிலை
farīqan
فَرِيقًا
a group
ஒரு பிரிவினரை
taqtulūna
تَقْتُلُونَ
you killed
கொன்றீர்கள்
watasirūna
وَتَأْسِرُونَ
and you took captive
இன்னும் சிறைப்பிடித்தீர்கள்
farīqan
فَرِيقًا
a group
ஒரு பிரிவினரை

Transliteration:

Wa anzalal lazeena zaaha roohum min Ahlil Kitaabi min sa yaaseehim wa qazafa fee quloobihimm mur ru'ba freeqan taqtuloona wa taasiroona fareeqaaa (QS. al-ʾAḥzāb:26)

English Sahih International:

And He brought down those who supported them among the People of the Scripture from their fortresses and cast terror into their hearts [so that] a party [i.e., their men] you killed, and you took captive a party [i.e., the women and children]. (QS. Al-Ahzab, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதத்தை உடையவர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்க வைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௬)

Jan Trust Foundation

இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை கொன்றீர்கள். ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்.