Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௫

Qur'an Surah Al-Ahzab Verse 25

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا ۗوَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ ۗوَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًاۚ (الأحزاب : ٣٣)

waradda
وَرَدَّ
And Allah turned back
திருப்பிவிட்டான்
l-lahu
ٱللَّهُ
And Allah turned back
அல்லாஹ்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரிப்பாளர்களை
bighayẓihim
بِغَيْظِهِمْ
in their rage
அவர்களது கோபத்துடன்
lam yanālū
لَمْ يَنَالُوا۟
not they obtained
அவர்கள் அடையவில்லை
khayran
خَيْرًاۚ
any good
எந்த நன்மையையும்
wakafā
وَكَفَى
And sufficient is
பாதுகாத்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(for) the believers
நம்பிக்கையாளர்களை
l-qitāla
ٱلْقِتَالَۚ
(in) the battle
போரை விட்டும்
wakāna
وَكَانَ
and Allah is
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
and Allah is
அல்லாஹ்
qawiyyan
قَوِيًّا
All-Strong
மகா வலிமை மிக்கவனாக
ʿazīzan
عَزِيزًا
All-Mighty
மிகைத்தவனாக

Transliteration:

Wa raddal laahul lazeena kafaroo bighaizihim lam yanaaloo khairaa; wa kafal laahul mu'mineenal qitaal; wa kaanal laahu Qawiyyan 'Azeezaa (QS. al-ʾAḥzāb:25)

English Sahih International:

And Allah repelled those who disbelieved, in their rage, not having obtained any good. And sufficient was Allah for the believers in battle, and ever is Allah Powerful and Exalted in Might. (QS. Al-Ahzab, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்துவிட்டான். (இப்போரில்) அவர்கள் யாதொரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமேயடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே காத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கை யாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௫)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடைய வில்லை. நம்பிக்கையாளர்களை போரை விட்டும் அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமை மிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கின்றான்.