Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௪

Qur'an Surah Al-Ahzab Verse 24

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِيَجْزِيَ اللّٰهُ الصّٰدِقِيْنَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ اِنْ شَاۤءَ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ ۗاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًاۚ (الأحزاب : ٣٣)

liyajziya
لِّيَجْزِىَ
That Allah may reward
இறுதியாக நற்கூலி தருவான்
l-lahu
ٱللَّهُ
That Allah may reward
அல்லாஹ்
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
the truthful
உண்மையாளர்களுக்கு
biṣid'qihim
بِصِدْقِهِمْ
for their truth
அவர்களின் உண்மைக்கு
wayuʿadhiba
وَيُعَذِّبَ
and punish
இன்னும் தண்டிப்பான்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
the hypocrites
நயவஞ்சகர்களை
in shāa
إِن شَآءَ
if He wills
அவன் நாடினால்
aw
أَوْ
or
அல்லது
yatūba
يَتُوبَ
turn in mercy
பிழை பொறுப்பான்
ʿalayhim
عَلَيْهِمْۚ
to them
அவர்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful
மகா கருணையாளனாக

Transliteration:

Li yajziyal aahus saadiqeena bisidqihim wa yu'azzibal munaafiqeena in shaaa'a aw yatooba 'alaihim; innal laaha kaana Ghafoorar Raheemaa (QS. al-ʾAḥzāb:24)

English Sahih International:

That Allah may reward the truthful for their truth and punish the hypocrites if He wills or accept their repentance. Indeed, Allah is ever Forgiving and Merciful. (QS. Al-Ahzab, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

உண்மையுடன் நடந்துகொண்ட இத்தகையவர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௪)

Jan Trust Foundation

உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது அவர்களை பிழை பொறு(த்து ஈமானை ஏற்கவை)ப்பான். (ஆகவே, அவர்களின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுவார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கின்றான்.