Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௩

Qur'an Surah Al-Ahzab Verse 23

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰى نَحْبَهٗۙ وَمِنْهُمْ مَّنْ يَّنْتَظِرُ ۖوَمَا بَدَّلُوْا تَبْدِيْلًاۙ (الأحزاب : ٣٣)

mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
Among the believers
நம்பிக்கையாளர்களில்
rijālun
رِجَالٌ
(are) men
ஆண்களும்
ṣadaqū
صَدَقُوا۟
(who) have been true
உண்மைப்படுத்தினர்
مَا
(to) what
எதை
ʿāhadū
عَٰهَدُوا۟
they promised Allah
ஒப்பந்தம் செய்தார்களோ
l-laha
ٱللَّهَ
they promised Allah
அல்லாஹ்விடம்
ʿalayhi
عَلَيْهِۖ
[on it]
அதன் மீது
famin'hum
فَمِنْهُم
And among them
அவர்களில்
man qaḍā
مَّن قَضَىٰ
(is he) who has fulfilled
நிறைவேற்றியவரும் உண்டு
naḥbahu
نَحْبَهُۥ
his vow
தனது நேர்ச்சையை
wamin'hum
وَمِنْهُم
and among them
இன்னும் அவர்களில்
man yantaẓiru
مَّن يَنتَظِرُۖ
(is he) who awaits
எதிர்பார்ப்பவரும் உண்டு
wamā baddalū tabdīlan
وَمَا بَدَّلُوا۟ تَبْدِيلًا
And not they alter (by) any alteration
இன்னும் அவர்கள் மாற்றிவிடவில்லை

Transliteration:

Minal mu'mineena rijaalun sadaqoo maa 'aahadul laaha 'alaihi faminhum man qadaa nahbahoo wa minhum mai yantaziru wa maa baddaloo tabdeelaa (QS. al-ʾAḥzāb:23)

English Sahih International:

Among the believers are men true to what they promised Allah. Among them is he who has fulfilled his vow [to the death], and among them is he who awaits [his chance]. And they did not alter [the terms of their commitment] by any alteration – (QS. Al-Ahzab, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து "ஷஹாதத்" என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்துவிட்டனர். வேறு சிலர் (மரணிக்க வில்லை என்றாலும் அதனை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியி லிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டு விடவேயில்லை. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௩)

Jan Trust Foundation

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விடம் எதன்மீது ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கின்றனர். தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை.