Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௨

Qur'an Surah Al-Ahzab Verse 22

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَصَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ ۖوَمَا زَادَهُمْ اِلَّآ اِيْمَانًا وَّتَسْلِيْمًاۗ (الأحزاب : ٣٣)

walammā raā
وَلَمَّا رَءَا
And when saw
பார்த்தபோது
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்
l-aḥzāba
ٱلْأَحْزَابَ
the confederates
இராணுவங்களை
qālū
قَالُوا۟
they said
கூறினார்கள்
hādhā
هَٰذَا
"This
இது
mā waʿadanā
مَا وَعَدَنَا
(is) what Allah promised us
எங்களுக்கு வாக்களித்ததாகும்
l-lahu
ٱللَّهُ
Allah promised us
அல்லாஹ்(வும்)
warasūluhu
وَرَسُولُهُۥ
and His Messenger
அவனது தூதரும்
waṣadaqa
وَصَدَقَ
and Allah spoke the truth
உண்மை கூறினார்(கள்)
l-lahu
ٱللَّهُ
and Allah spoke the truth
அல்லாஹ்வும்
warasūluhu
وَرَسُولُهُۥۚ
and His Messenger
அவனது தூதரும்
wamā
وَمَا
And not
அதிகப்படுத்தவில்லை
zādahum
زَادَهُمْ
it increased them
அவர்களுக்கு
illā
إِلَّآ
except
தவிர
īmānan
إِيمَٰنًا
(in) faith
நம்பிக்கை(யையும்)
wataslīman
وَتَسْلِيمًا
and submission
திருப்தியையும்

Transliteration:

Wa lammaa ra al mu'minoonal Ahzaaba qaaloo haaza maa wa'adanal laahu wa Rasooluh; wa maa zaadahum illaaa eemaananw wa tasleemaa (QS. al-ʾAḥzāb:22)

English Sahih International:

And when the believers saw the companies, they said, "This is what Allah and His Messenger had promised us, and Allah and His Messenger spoke the truth." And it increased them only in faith and acceptance. (QS. Al-Ahzab, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்ட பொழுது "(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மை யையே கூறினார்கள்" என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௨)

Jan Trust Foundation

அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்கள் இராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது. அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை கூறினார்கள்” என்று கூறினார்கள். அது (-இராணுவங்களின் வருகை) நம்பிக்கையையும் திருப்தி (-கட்டுப்படுதலையும் பொறுமை)யையும் தவிர (வேறெதையும்) அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.