குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௦
Qur'an Surah Al-Ahzab Verse 20
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ يَذْهَبُوْا ۚوَاِنْ يَّأْتِ الْاَحْزَابُ يَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِى الْاَعْرَابِ يَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَاۤىِٕكُمْ ۖوَلَوْ كَانُوْا فِيْكُمْ مَّا قٰتَلُوْٓا اِلَّا قَلِيْلًا ࣖ (الأحزاب : ٣٣)
- yaḥsabūna
- يَحْسَبُونَ
- They think
- எண்ணுகின்றனர்
- l-aḥzāba
- ٱلْأَحْزَابَ
- the confederates
- இராணுவங்கள்
- lam yadhhabū
- لَمْ يَذْهَبُوا۟ۖ
- (have) not withdrawn
- அவர்கள் செல்லவில்லை
- wa-in yati
- وَإِن يَأْتِ
- And if (should) come
- வந்தால்
- l-aḥzābu
- ٱلْأَحْزَابُ
- the confederates
- அந்த இராணுவங்கள்
- yawaddū
- يَوَدُّوا۟
- they would wish
- ஆசைப்படுகின்றனர்
- law annahum
- لَوْ أَنَّهُم
- if that they (were)
- நிச்சயமாக அவர்கள் இருந்திருக்க வேண்டுமே
- bādūna
- بَادُونَ
- living in (the) desert
- கிராமங்களில்
- fī l-aʿrābi
- فِى ٱلْأَعْرَابِ
- among the Bedouins
- தாங்கள் கிராமவாசிகளுடன்
- yasalūna
- يَسْـَٔلُونَ
- asking
- அவர்கள் விசாரிக்கின்றனர்
- ʿan anbāikum
- عَنْ أَنۢبَآئِكُمْۖ
- about your news
- உங்கள் செய்திகளைப் பற்றி
- walaw kānū
- وَلَوْ كَانُوا۟
- And if they were
- அவர்கள் இருந்தாலும்
- fīkum
- فِيكُم
- among you
- உங்களுடன்
- mā qātalū
- مَّا قَٰتَلُوٓا۟
- not they would fight
- அவர்கள் போர் புரிந்திருக்க மாட்டார்கள்
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- except a little
- மிகக் குறைவாகவே தவிர
Transliteration:
Yahsaboonal Ahzaaba lam yazhaboo wa iny yaatil Ahzaabu yawaddoo law annahum baadoona fil A'raabi yasaloona 'an ambaaa'ikum wa law kaanoo feekum maa qaatalooo illaa qaleela(QS. al-ʾAḥzāb:20)
English Sahih International:
They think the companies have not [yet] withdrawn. And if the companies should come [again], they would wish they were in the desert among the bedouins, inquiring [from afar] about your news. And if they should be among you, they would not fight except for a little. (QS. Al-Ahzab, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவம் முற்றுகையை எடுத்துக் கொண்டு சென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் திரும்ப வந்துவிட்டாலோ யாதொரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகின்றீர்களோ தோல்வியுறு கின்றீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கிவிட்ட போதிலும், ஒரு சொற்ப நேரமே அன்றி (அதிகமாக) போர் புரியமாட்டார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௦)
Jan Trust Foundation
அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-நயவஞ்சகர்கள்) இராணுவங்கள் (தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லவில்லை என்று எண்ணுகின்றனர். அந்த இராணுவங்கள் (திரும்ப) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகின்றனர். உங்கள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கின்றனர். அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்.