Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௯

Qur'an Surah Al-Ahzab Verse 19

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَشِحَّةً عَلَيْكُمْ ۖ فَاِذَا جَاۤءَ الْخَوْفُ رَاَيْتَهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ تَدُوْرُ اَعْيُنُهُمْ كَالَّذِيْ يُغْشٰى عَلَيْهِ مِنَ الْمَوْتِۚ فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَى الْخَيْرِۗ اُولٰۤىِٕكَ لَمْ يُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْۗ وَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا (الأحزاب : ٣٣)

ashiḥḥatan
أَشِحَّةً
Miserly
மிகக் கருமிகளாக இருக்கின்றனர்
ʿalaykum
عَلَيْكُمْۖ
towards you
உங்கள் விஷயத்தில்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
But when comes
வந்தால்
l-khawfu
ٱلْخَوْفُ
the fear
பயம்
ra-aytahum
رَأَيْتَهُمْ
you see them
அவர்களை நீர் காண்பீர்
yanẓurūna
يَنظُرُونَ
looking
அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக
ilayka
إِلَيْكَ
at you
உம் பக்கம்
tadūru
تَدُورُ
revolving
சுழலக்கூடிய நிலையில்
aʿyunuhum
أَعْيُنُهُمْ
their eyes
அவர்களது கண்கள்
ka-alladhī yugh'shā
كَٱلَّذِى يُغْشَىٰ
like one who faints
மயக்கம் அடைகின்றவனைப் போல்
ʿalayhi
عَلَيْهِ
faints
அவன் மீது
mina l-mawti
مِنَ ٱلْمَوْتِۖ
from [the] death
மரணத்தால்
fa-idhā dhahaba
فَإِذَا ذَهَبَ
But when departs
சென்றுவிட்டால்
l-khawfu
ٱلْخَوْفُ
the fear
பயம்
salaqūkum
سَلَقُوكُم
they smite you
உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர்
bi-alsinatin
بِأَلْسِنَةٍ
with tongues
நாவுகளினால்
ḥidādin
حِدَادٍ
sharp
கூர்மையான
ashiḥḥatan
أَشِحَّةً
miserly
பேராசையுடையவர்களாக
ʿalā l-khayri
عَلَى ٱلْخَيْرِۚ
towards the good
செல்வத்தின் மீது
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
lam yu'minū
لَمْ يُؤْمِنُوا۟
not they have believed
நம்பிக்கை கொள்ளவில்லை
fa-aḥbaṭa
فَأَحْبَطَ
so Allah made worthless
ஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான்
l-lahu
ٱللَّهُ
so Allah made worthless
அல்லாஹ்
aʿmālahum
أَعْمَٰلَهُمْۚ
their deeds
அவர்களின் அமல்களை
wakāna
وَكَانَ
And is
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
that
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
for Allah
அல்லாஹ்விற்கு
yasīran
يَسِيرًا
easy
மிக எளிதாக

Transliteration:

Ashihhatan 'alaikum faizaa jaaa'al khawfu ra aytahum yanzuroona ilaika tadooru a'yunuhum kallazee yughshaa 'alaihi minal mawti fa izaa zahabal khawfu salqookum bi alsinatin hidaadin ashibbatan 'alal khayr; ulaaa'ika lam yu'minoo fa ahbatal laahu a'maalahum; wa kaana zaalika 'alal laahi yaseeraa (QS. al-ʾAḥzāb:19)

English Sahih International:

Indisposed toward you. And when fear comes, you see them looking at you, their eyes revolving like one being overcome by death. But when fear departs, they lash you with sharp tongues, indisposed toward [any] good. Those have not believed, so Allah has rendered their deeds worthless, and ever is that, for Allah, easy. (QS. Al-Ahzab, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) யாதொரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பயம் நீங்கி (நம்பிக்கை யாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தை களைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இத்தகையவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௯)

Jan Trust Foundation

(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கின்றனர். (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைகின்றவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை நீர் காண்பீர். (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர் (உங்களை ஏசுகின்றனர்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கின்றது.