Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௮

Qur'an Surah Al-Ahzab Verse 18

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قَدْ يَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِيْنَ مِنْكُمْ وَالْقَاۤىِٕلِيْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَيْنَا ۚوَلَا يَأْتُوْنَ الْبَأْسَ اِلَّا قَلِيْلًاۙ (الأحزاب : ٣٣)

qad
قَدْ
Verily
திட்டமாக
yaʿlamu
يَعْلَمُ
Allah knows
நன்கறிவான்
l-lahu
ٱللَّهُ
Allah knows
அல்லாஹ்
l-muʿawiqīna
ٱلْمُعَوِّقِينَ
those who hinder
தடுப்பவர்களை(யும்)
minkum
مِنكُمْ
among you
உங்களில்
wal-qāilīna
وَٱلْقَآئِلِينَ
and those who say
சொல்பவர்களையும்
li-ikh'wānihim
لِإِخْوَٰنِهِمْ
to their brothers
தங்கள் சகோதரர்களுக்கு
halumma
هَلُمَّ
"Come
வந்துவிடுங்கள்
ilaynā
إِلَيْنَاۖ
to us"
எங்களிடம்
walā yatūna
وَلَا يَأْتُونَ
and not they come
இன்னும் வரமாட்டார்கள்
l-basa
ٱلْبَأْسَ
(to) the battle
போருக்கு
illā qalīlan
إِلَّا قَلِيلًا
except a few
குறைவாகவே தவிர

Transliteration:

Qad ya'lamul laahul mu'awwiqeena minkum walqaaa'ileena li ikhwaanihim hahumma ilainaa, wa laa yaatoonal baasa illaa qaleelaa (QS. al-ʾAḥzāb:18)

English Sahih International:

Already Allah knows the hinderers among you and those [hypocrites] who say to their brothers, "Come to us," and do not go to battle, except for a few, (QS. Al-Ahzab, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் "(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்துவிடுங்கள்" என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௮)

Jan Trust Foundation

உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, “நம்மிடம் வந்து விடுங்கள்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும் தங்கள் சகோதரர்களுக்கு, எங்களிடம் வந்துவிடுங்கள் என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர (பெரும்பாலும்) போருக்கு வரமாட்டார்கள்.