Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௭

Qur'an Surah Al-Ahzab Verse 17

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَنْ ذَا الَّذِيْ يَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْۤءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ۗوَلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا (الأحزاب : ٣٣)

qul
قُلْ
Say
கூறுவீராக!
man
مَن
"Who
யார்?
dhā alladhī yaʿṣimukum
ذَا ٱلَّذِى يَعْصِمُكُم
(is) it that (is) it that (can) protect you
உங்களைப் பாதுகாக்கின்றவர்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்வைவிட்டும்
in arāda
إِنْ أَرَادَ
If He intends
நாடினால்
bikum
بِكُمْ
for you
உங்களுக்கு
sūan
سُوٓءًا
any harm
ஒரு தீங்கை
aw arāda bikum
أَوْ أَرَادَ بِكُمْ
or He intends for you
அல்லது/அவன் நாடினால்/உங்களுக்கு
raḥmatan
رَحْمَةًۚ
a mercy?"
கருணை புரிய
walā yajidūna
وَلَا يَجِدُونَ
And not they will find
இன்னும் காணமாட்டார்கள்
lahum
لَهُم
for them
தங்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
waliyyan
وَلِيًّا
any protector
பொறுப்பாளரையோ
walā naṣīran
وَلَا نَصِيرًا
and not any helper
உதவியாளரையோ

Transliteration:

Qul m an zal lazee ya'simukum minal laahi in araada bikum sooo'an aw araada bikum rahmah; wa laa yajidoona lahum min doonil laahi waliyyanw wa laa naseeraa (QS. al-ʾAḥzāb:17)

English Sahih International:

Say, "Who is it that can protect you from Allah if He intends for you an ill or intends for you a mercy?" And they will not find for themselves esides Allah any protector or any helper. (QS. Al-Ahzab, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அல்லது உங்களுக்கு அருள் புரியவே நாடினாலும் அதனை உங்களுக்குத் தடுத்து விடுபவன் யார்? அல்லாஹ்வையன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாத்துக் கொள்பவர்களையும் காண மாட்டார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௭)

Jan Trust Foundation

“அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்வை விட்டும் உங்களைப் பாதுகாக்கின்றவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதையும் யாரால் நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.