Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௬

Qur'an Surah Al-Ahzab Verse 16

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّنْ يَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِيْلًا (الأحزاب : ٣٣)

qul
قُل
Say
கூறுவீராக!
lan yanfaʿakumu
لَّن يَنفَعَكُمُ
"Never will benefit you
உங்களுக்கு அறவே பலனளிக்காது
l-firāru
ٱلْفِرَارُ
the fleeing
விரண்டோடுவது
in farartum
إِن فَرَرْتُم
if you flee
நீங்கள் விரண்டோடினால்
mina l-mawti
مِّنَ ٱلْمَوْتِ
from death
மரணத்தைவிட்டு
awi l-qatli
أَوِ ٱلْقَتْلِ
or killing
அல்லது கொல்லப்படுவதை விட்டு
wa-idhan
وَإِذًا
and then
அப்போதும்
lā tumattaʿūna
لَّا تُمَتَّعُونَ
not you will be allowed to enjoy
சுகமளிக்கப்பட மாட்டீர்கள்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
except a little"
கொஞ்சமே தவிர

Transliteration:

Qul lany y anfa'akumul firaaru in farartum minal mawti awil qatli wa izal laa tumatta'oona illaa qaleelaa (QS. al-ʾAḥzāb:16)

English Sahih International:

Say, [O Muhammad], "Never will fleeing benefit you if you should flee from death or killing; and then [if you did], you would not be given enjoyment [of life] except for a little." (QS. Al-Ahzab, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மரணத்தை விட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடியபோதிலும், உங்களுடைய ஓட்டம் உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்டபோதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்." (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௬)

Jan Trust Foundation

“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில்) சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.