Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௪

Qur'an Surah Al-Ahzab Verse 14

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُـِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَآ اِلَّا يَسِيْرًا (الأحزاب : ٣٣)

walaw dukhilat
وَلَوْ دُخِلَتْ
And if had been entered
நுழைந்தால்
ʿalayhim
عَلَيْهِم
upon them
அவர்கள் மீது
min
مِّنْ
from
சுற்றுப் புறங்களில் இருந்து
aqṭārihā
أَقْطَارِهَا
all its sides
சுற்றுப் புறங்களில் இருந்து அதன்
thumma
ثُمَّ
then
பிறகு
su-ilū
سُئِلُوا۟
they had been asked
அவர்களிடம் கேட்கப்பட்டால்
l-fit'nata
ٱلْفِتْنَةَ
the treachery
குழப்பத்தை
laātawhā
لَءَاتَوْهَا
they (would) have certainly done it
அவர்கள் செய்திருப்பார்கள் அதை
wamā talabbathū
وَمَا تَلَبَّثُوا۟
and not they (would) have hesitated
அவர்கள் தாமதித்திருக்க மாட்டார்கள்
bihā
بِهَآ
over it
அதற்கு
illā yasīran
إِلَّا يَسِيرًا
except a little
கொஞ்சமே தவிர

Transliteration:

wa law dukhilat 'alaihim min aqtaarihaa summa su'ilul fitnata la aatawhaa wa maa talabbasoo bihaaa illaa yaseeraa (QS. al-ʾAḥzāb:14)

English Sahih International:

And if they had been entered upon from all its [surrounding] regions and fitnah [i.e., disbelief] had been demanded of them, they would have done it and not hesitated over it except briefly. (QS. Al-Ahzab, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். தவிர (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமேயன்றி அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.) (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௪)

Jan Trust Foundation

அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-அந்த முனாஃபிக்குகள்) மீது அதன் (-மதீனாவின்) சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பத்தை (-இணை வைத்தலை செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை செய்திருப்பார்கள். அதற்கு (-நிராகரிப்பாளர்களின் கூற்றுக்கு பதில் தருவதற்கு) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்.