குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௩
Qur'an Surah Al-Ahzab Verse 13
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ قَالَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْهُمْ يٰٓاَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚوَيَسْتَأْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُوْلُوْنَ اِنَّ بُيُوْتَنَا عَوْرَةٌ ۗوَمَا هِيَ بِعَوْرَةٍ ۗاِنْ يُّرِيْدُوْنَ اِلَّا فِرَارًا (الأحزاب : ٣٣)
- wa-idh qālat
- وَإِذْ قَالَت
- And when said
- கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
- ṭāifatun
- طَّآئِفَةٌ
- a party
- ஒரு சாரார்
- min'hum
- مِّنْهُمْ
- of them
- அவர்களில்
- yāahla yathriba
- يَٰٓأَهْلَ يَثْرِبَ
- "O People (of) Yathrib!
- யஸ்ரிப் வாசிகளே!
- lā muqāma
- لَا مُقَامَ
- No stand
- தங்குவது அறவே முடியாது
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- fa-ir'jiʿū
- فَٱرْجِعُوا۟ۚ
- so return"
- ஆகவே, திரும்பிவிடுங்கள்
- wayastadhinu
- وَيَسْتَـْٔذِنُ
- And asked permission
- அனுமதிகேட்கின்றனர்
- farīqun
- فَرِيقٌ
- a group
- ஒரு பிரிவினர்
- min'humu
- مِّنْهُمُ
- of them
- அவர்களில்
- l-nabiya
- ٱلنَّبِىَّ
- (from) the Prophet
- நபியிடம்
- yaqūlūna
- يَقُولُونَ
- saying
- கூறியவர்களாக
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- buyūtanā
- بُيُوتَنَا
- our houses
- எங்கள் இல்லங்கள்
- ʿawratun
- عَوْرَةٌ
- (are) exposed"
- பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன
- wamā
- وَمَا
- and not
- ஆனால் இல்லை.
- hiya
- هِىَ
- they
- அவை
- biʿawratin
- بِعَوْرَةٍۖ
- (were) exposed
- பாதுகாப்பு அற்றதாக
- in yurīdūna
- إِن يُرِيدُونَ
- Not they wished
- அவர்கள் நாடவில்லை
- illā
- إِلَّا
- but
- தவிர
- firāran
- فِرَارًا
- to flee
- விரண்டோடுவதை
Transliteration:
Wa iz qaalat taaa'ifatum minhum yaaa ahla Yasriba laa muqaamaa lakum farji'oo; wa yastaazina fareequm minhumun Nabiyya yaqooloona inna buyootanaa 'awrah; wa maa hiya bi'awratin iny yureedoona illaa firaaraa(QS. al-ʾAḥzāb:13)
English Sahih International:
And when a faction of them said, "O people of Yathrib, there is no stability for you [here], so return [home]." And a party of them asked permission of the Prophet, saying, "Indeed, our houses are exposed [i.e., unprotected]," while they were not exposed. They did not intend except to flee. (QS. Al-Ahzab, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன" என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௩)
Jan Trust Foundation
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்| “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில்) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள் என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் (திறந்து) பாதுகாப்பு அற்றதாக” இருக்கின்றன என்று கூறியவர்களாக அவர்களில் ஒரு பிரிவினர் நபியிடம் அனுமதி கேட்கின்றனர். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (மைதானத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (வேறு எதையும்) நாடவில்லை.