Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 8

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௭௧

يُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا ٧١

yuṣ'liḥ
يُصْلِحْ
அவன்சீர்படுத்துவான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
aʿmālakum
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை
wayaghfir
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
dhunūbakum
ذُنُوبَكُمْۗ
உங்கள் பாவங்களை
waman
وَمَن
யார்
yuṭiʿi
يُطِعِ
கீழ்ப்படிகின்றாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
faqad
فَقَدْ
திட்டமாக
fāza
فَازَ
வெற்றிபெறுவார்
fawzan
فَوْزًا
வெற்றி
ʿaẓīman
عَظِيمًا
மகத்தான
அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்துவிட்டார். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௭௧)
Tafseer
௭௨

اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْاِنْسَانُۗ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًاۙ ٧٢

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
ʿaraḍnā
عَرَضْنَا
சமர்ப்பித்தோம்
l-amānata
ٱلْأَمَانَةَ
அமானிதத்தை
ʿalā l-samāwāti
عَلَى ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள் மீது
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wal-jibāli
وَٱلْجِبَالِ
இன்னும் மலைகள்
fa-abayna
فَأَبَيْنَ
அவைமறுத்துவிட்டன
an yaḥmil'nahā
أَن يَحْمِلْنَهَا
அதை சுமப்பதற்கு
wa-ashfaqna
وَأَشْفَقْنَ
இன்னும் அவை பயந்தன
min'hā
مِنْهَا
அதனால்
waḥamalahā
وَحَمَلَهَا
அதை சுமந்து கொண்டான்
l-insānu
ٱلْإِنسَٰنُۖ
மனிதன்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
ẓalūman
ظَلُومًا
அநியாயக்காரனாக
jahūlan
جَهُولًا
அறியாதவனாக
நிச்சயமாக "(நம்முடைய) பொறுப்பைச் சுமந்து கொள்வீர்களா?" என்று நாம் வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதனைப் பற்றிப் பயந்து, அதனைச் சுமந்து கொள்ளாது விலகிவிட்டன. அத்தகைய பொறுப்பைத்தான் மனிதன் சுமந்துகொண்டான். (ஆகவே) நிச்சயமாக அவன் அறியாமையால் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௭௨)
Tafseer
௭௩

لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقَتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ ٧٣

liyuʿadhiba
لِّيُعَذِّبَ
வேதனை செய்வதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகமுடைய ஆண்களை(யும்)
wal-munāfiqāti
وَٱلْمُنَٰفِقَٰتِ
நயவஞ்சகமுடைய பெண்களையும்
wal-mush'rikīna
وَٱلْمُشْرِكِينَ
இணைவைக்கின்ற ஆண்களையும்
wal-mush'rikāti
وَٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கின்ற பெண்களையும்
wayatūba
وَيَتُوبَ
மன்னிப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā l-mu'minīna
عَلَى ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களை
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِۗ
நம்பிக்கை கொண்ட பெண்களை
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًۢا
பெரும் கருணையாளனாக
(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பி விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௭௩)
Tafseer