Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 5

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௪௧

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًاۙ ٤١

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
dhik'ran kathīran
ذِكْرًا كَثِيرًا
மிக அதிகம்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௧)
Tafseer
௪௨

وَّسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا ٤٢

wasabbiḥūhu
وَسَبِّحُوهُ
இன்னும் அவனை துதியுங்கள்
buk'ratan
بُكْرَةً
காலையிலும்
wa-aṣīlan
وَأَصِيلًا
மாலையிலும்
காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௨)
Tafseer
௪௩

هُوَ الَّذِيْ يُصَلِّيْ عَلَيْكُمْ وَمَلٰۤىِٕكَتُهٗ لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا ٤٣

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்தான்
yuṣallī
يُصَلِّى
அருள் புரிவான் -பிரார்த்திப்பார்(கள்)
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
wamalāikatuhu
وَمَلَٰٓئِكَتُهُۥ
இன்னும் அவனது வானவர்கள்
liyukh'rijakum
لِيُخْرِجَكُم
உங்களை அவன் வெளியேற்றுவதற்காக
mina l-ẓulumāti
مِّنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
ilā l-nūri
إِلَى ٱلنُّورِۚ
வெளிச்சத்தின் பக்கம்
wakāna
وَكَانَ
அவன் இருக்கிறான்
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை யாளர்கள் மீது
raḥīman
رَحِيمًا
மகா கருணையுள்ளவனாக
அவன்தான் உங்களை(ப் பலவகைப் பாவ) இருள்களில் இருந்து வெளிப்படுத்தி பிரகாசத்தின் பக்கம் கொண்டு வந்து உங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். அவனுடைய மலக்குகளும் உங்களுக் காகப் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ், நம்பிக்கையாளர்(களாகிய உங்)களின் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௩)
Tafseer
௪௪

تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهٗ سَلٰمٌ ۚوَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِيْمًا ٤٤

taḥiyyatuhum
تَحِيَّتُهُمْ
அவர்களது முகமன்
yawma yalqawnahu
يَوْمَ يَلْقَوْنَهُۥ
அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில்
salāmun
سَلَٰمٌۚ
ஸலாம்
wa-aʿadda
وَأَعَدَّ
இன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajran
أَجْرًا
கூலியை
karīman
كَرِيمًا
கண்ணியமான
(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) "ஈடேற்றம் உண்டாவதாக" என்று ஆசீர்வதிப்பான். அன்றி, அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௪)
Tafseer
௪௫

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِنَّآ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًاۙ ٤٥

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
arsalnāka
أَرْسَلْنَٰكَ
நாம் உம்மை அனுப்பினோம்
shāhidan
شَٰهِدًا
சாட்சியாளராக(வும்)
wamubashiran
وَمُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராகவும்
wanadhīran
وَنَذِيرًا
அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௫)
Tafseer
௪௬

وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا ٤٦

wadāʿiyan
وَدَاعِيًا
அழைப்பவராகவும்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
bi-idh'nihi
بِإِذْنِهِۦ
அவனது அனுமதிகொண்டு
wasirājan
وَسِرَاجًا
விளக்காகவும்
munīran
مُّنِيرًا
பிரகாசிக்கின்ற
அன்றி, அல்லாஹ்வினுடைய உத்தரவுப்படி (மக்களை நீங்கள்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்கள்). ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௬)
Tafseer
௪௭

وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِيْرًا ٤٧

wabashiri
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
bi-anna
بِأَنَّ
நிச்சயமாக
lahum
لَهُم
அவர்களுக்கு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
faḍlan
فَضْلًا
அருள்
kabīran
كَبِيرًا
மிகப் பெரிய
ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௭)
Tafseer
௪௮

وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ وَدَعْ اَذٰىهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗوَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا ٤٨

walā tuṭiʿi
وَلَا تُطِعِ
கீழ்ப்படியாதீர்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
wal-munāfiqīna
وَٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களுக்கும்
wadaʿ
وَدَعْ
இன்னும் விட்டுவிடுவீராக!
adhāhum
أَذَىٰهُمْ
அவர்களின் தொந்தரவை
watawakkal
وَتَوَكَّلْ
இன்னும் சார்ந்து இருப்பீராக!
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வை
wakafā
وَكَفَىٰ
போதுமான(வன்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளன்
நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகருக்கும் நீங்கள் வழிப்படாதீர்கள். அவர்களால் (உங்களுக்கு) ஏற்படும் துன்பங்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். (உங்களுடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுங்கள். அல்லாஹ்வே (உங்களுக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௮)
Tafseer
௪௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَاۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا ٤٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
idhā nakaḥtumu
إِذَا نَكَحْتُمُ
நீங்கள் திருமணம் முடித்தால்
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கைகொண்ட பெண்களை
thumma
ثُمَّ
பிறகு
ṭallaqtumūhunna
طَلَّقْتُمُوهُنَّ
அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an
أَن
நீங்கள் உறவு வைப்பதற்கு
tamassūhunna
تَمَسُّوهُنَّ
நீங்கள் உறவு வைப்பதற்கு அவர்களுடன்
famā lakum
فَمَا لَكُمْ
உங்களுக்கு இல்லை
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
min ʿiddatin
مِنْ عِدَّةٍ
எவ்வித இத்தாவும்
taʿtaddūnahā
تَعْتَدُّونَهَاۖ
நீங்கள் அதைக் கணக்கிட வேண்டிய
famattiʿūhunna
فَمَتِّعُوهُنَّ
செல்வத்தை கொடுங்கள்! அவர்களுக்கு
wasarriḥūhunna
وَسَرِّحُوهُنَّ
இன்னும் விடுவித்து விடுங்கள் அவர்களை
sarāḥan
سَرَاحًا
விடுவித்தல்
jamīlan
جَمِيلًا
அழகிய முறையில்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே "தலாக்"குக் கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்க வேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௯)
Tafseer
௫௦

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِنَّآ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِيْٓ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِيْنُكَ مِمَّآ اَفَاۤءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِيْ هَاجَرْنَ مَعَكَۗ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ اِنْ اَرَادَ النَّبِيُّ اَنْ يَّسْتَنْكِحَهَا خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِيْٓ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ٥٠

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
aḥlalnā
أَحْلَلْنَا
ஆகுமாக்கினோம்
laka
لَكَ
உமக்கு
azwājaka
أَزْوَٰجَكَ
உமது மனைவிகளை(யும்)
allātī
ٱلَّٰتِىٓ
எவர்கள்
ātayta
ءَاتَيْتَ
நீர் கொடுத்தீர்
ujūrahunna
أُجُورَهُنَّ
திருமணக் கொடைகளை அவர்களின்
wamā
وَمَا
இன்னும் எவர்கள்
malakat
مَلَكَتْ
சொந்தமாகிய(து)
yamīnuka
يَمِينُكَ
உமது வலக்கரம்
mimmā afāa l-lahu
مِمَّآ أَفَآءَ ٱللَّهُ
அல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்து
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
wabanāti
وَبَنَاتِ
மகள்களையும்
ʿammika
عَمِّكَ
உமது சாச்சாவின்
wabanāti
وَبَنَاتِ
மகள்களையும்
ʿammātika
عَمَّٰتِكَ
உமது மாமியின்
wabanāti
وَبَنَاتِ
மகள்களையும்
khālika
خَالِكَ
உமது தாய் மாமாவின்
wabanāti
وَبَنَاتِ
மகள்களையும்
khālātika
خَٰلَٰتِكَ
உமது காலாவின்
allātī
ٱلَّٰتِى
எவர்கள்
hājarna
هَاجَرْنَ
ஹிஜ்ரா செய்தனர்
maʿaka
مَعَكَ
உம்முடன்
wa-im'ra-atan
وَٱمْرَأَةً
இன்னும் ஒரு பெண்
mu'minatan
مُّؤْمِنَةً
முஃமினான
in wahabat
إِن وَهَبَتْ
அன்பளிப்பு செய்தால்
nafsahā
نَفْسَهَا
தன்னை
lilnnabiyyi
لِلنَّبِىِّ
நபிக்கு
in arāda
إِنْ أَرَادَ
நாடினால்
l-nabiyu
ٱلنَّبِىُّ
நபி(யும்)
an yastankiḥahā
أَن يَسْتَنكِحَهَا
அவளை மணமுடிக்க
khāliṣatan
خَالِصَةً
பிரத்தியோகமாகும்
laka
لَّكَ
உமக்கு மட்டும்
min dūni
مِن دُونِ
அன்றி
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَۗ
முஃமின்கள்
qad
قَدْ
திட்டமாக
ʿalim'nā
عَلِمْنَا
நாம் அறிவோம்
mā faraḍnā
مَا فَرَضْنَا
நாம் கடமையாக்கியதை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
fī azwājihim
فِىٓ أَزْوَٰجِهِمْ
அவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில்
wamā malakat aymānuhum
وَمَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ
இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள்
likaylā yakūna
لِكَيْلَا يَكُونَ
இருக்கக் கூடாது என்பதற்காக
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
ḥarajun
حَرَجٌۗ
சிரமம்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
ghafūran
غَفُورًا
மன்னிப்பாளனாக,
raḥīman
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக
நபியே! நிச்சயமாக நீங்கள் எவர்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்டீர்களோ அவர்களையும், அல்லாஹ் உங்களுக்கு (யுத்தத்தில்) அளித்து உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். உங்களது தந்தையின் சகோதரர்களின் பெண் மக்கள், உங்களது அத்தையின் பெண் மக்கள், உங்களது தாய்மாமனின் பெண் மக்கள், உங்களது தாயின் சகோதரியுடைய பெண் மக்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உங்களுடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். அன்றி) நம்பிக்கை கொண்ட யாதொரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். (நபியே!) இது சொந்தமாக உங்களுக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்று. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதனை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உங்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உங்களுக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫௦)
Tafseer