۞ وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَآ اَجْرَهَا مَرَّتَيْنِۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا ٣١
- waman
- وَمَن
- யார்
- yaqnut
- يَقْنُتْ
- பணிந்து நடப்பாரோ
- minkunna
- مِنكُنَّ
- உங்களில்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு(ம்)
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- அவனது தூதருக்கும்
- wataʿmal
- وَتَعْمَلْ
- இன்னும் செய்வாரோ
- ṣāliḥan
- صَٰلِحًا
- நன்மையை
- nu'tihā
- نُّؤْتِهَآ
- அவருக்கு நாம் கொடுப்போம்
- ajrahā
- أَجْرَهَا
- அவரது கூலியை
- marratayni
- مَرَّتَيْنِ
- இருமுறை
- wa-aʿtadnā lahā
- وَأَعْتَدْنَا لَهَا
- இன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம்
- riz'qan
- رِزْقًا
- உணவை
- karīman
- كَرِيمًا
- கண்ணியமான
உங்களில் எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நற்செயல்களைச் செய்தால், அதற்குரிய கூலியை அவருக்கு நாம் இரு மடங்காகத் தருவோம். அன்றி, மிக்க கண்ணியமான வாழ்க்கையையும் அவருக்கு நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௧)Tafseer
يٰنِسَاۤءَ النَّبِيِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَاۤءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِيْ فِيْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًاۚ ٣٢
- yānisāa
- يَٰنِسَآءَ
- மனைவிகளே!
- l-nabiyi
- ٱلنَّبِىِّ
- நபியின்
- lastunna
- لَسْتُنَّ
- நீங்கள் இல்லை
- ka-aḥadin
- كَأَحَدٍ
- ஒருவரைப் போன்று
- mina l-nisāi
- مِّنَ ٱلنِّسَآءِۚ
- பெண்களில்
- ini ittaqaytunna
- إِنِ ٱتَّقَيْتُنَّ
- நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால்
- falā takhḍaʿna bil-qawli
- فَلَا تَخْضَعْنَ بِٱلْقَوْلِ
- ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள்
- fayaṭmaʿa
- فَيَطْمَعَ
- தப்பாசைப்படுவான்
- alladhī fī qalbihi
- ٱلَّذِى فِى قَلْبِهِۦ
- எவன்/ தனது உள்ளத்தில்
- maraḍun
- مَرَضٌ
- நோய்
- waqul'na
- وَقُلْنَ
- இன்னும் பேசுங்கள்
- qawlan
- قَوْلًا
- பேச்சை
- maʿrūfan
- مَّعْرُوفًا
- சரியான
நபியுடைய மனைவிகளே! நீங்கள் மற்ற (சாதாரண) பெண்களைப் போன்றவர்களல்ல. நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும். ஆகவே, நீங்கள் (எதைக் கூறியபோதிலும்) யதார்த்தவாதிகளைப் போல் (கண்டிப்பாகப்) பேசிவிடுங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௨)Tafseer
وَقَرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ۗاِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًاۚ ٣٣
- waqarna
- وَقَرْنَ
- தங்கியிருங்கள்
- fī buyūtikunna
- فِى بُيُوتِكُنَّ
- உங்கள் இல்லங்களில்
- walā tabarrajna
- وَلَا تَبَرَّجْنَ
- அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள்
- tabarruja
- تَبَرُّجَ
- அலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்று
- l-jāhiliyati
- ٱلْجَٰهِلِيَّةِ
- அறியாமைக்காலத்தில்
- l-ūlā
- ٱلْأُولَىٰۖ
- முந்திய
- wa-aqim'na
- وَأَقِمْنَ
- நிலைநிறுத்துங்கள்!
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- waātīna
- وَءَاتِينَ
- கொடுங்கள்!
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- wa-aṭiʿ'na
- وَأَطِعْنَ
- கீழ்ப்படியுங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கும்
- warasūlahu
- وَرَسُولَهُۥٓۚ
- அவனது தூதருக்கும்
- innamā yurīdu
- إِنَّمَا يُرِيدُ
- நாடுவதெல்லாம்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyudh'hiba
- لِيُذْهِبَ
- போக்குவதற்கும்
- ʿankumu
- عَنكُمُ
- உங்களை விட்டும்
- l-rij'sa
- ٱلرِّجْسَ
- அசுத்தத்தை
- ahla l-bayti
- أَهْلَ ٱلْبَيْتِ
- வீட்டார்களே!
- wayuṭahhirakum taṭhīran
- وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
- முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்
(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச்சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று)திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். தொழுகையை கடைப்பிடித்தொழுகுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியுடைய) வீட்டுடையார்களே! உங்களை விட்டு எல்லா அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௩)Tafseer
وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِيْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِۗ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا ࣖ ٣٤
- wa-udh'kur'na
- وَٱذْكُرْنَ
- இன்னும் மனனம் செய்யுங்கள்
- mā yut'lā
- مَا يُتْلَىٰ
- ஓதப்படுகின்றவற்றையும்
- fī buyūtikunna
- فِى بُيُوتِكُنَّ
- உங்கள் இல்லங்களில்
- min āyāti
- مِنْ ءَايَٰتِ
- அதாவது,வசனங்களில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wal-ḥik'mati
- وَٱلْحِكْمَةِۚ
- இன்னும் ஞானத்தை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கின்றான்
- laṭīfan
- لَطِيفًا
- மிக கருணையாளனாக
- khabīran
- خَبِيرًا
- ஆழ்ந்தறிபவனாக
உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும், ஞான வாக்கியங்களையும் ஞாபகத்தில் வையுங்கள். (அவற்றைக் கொண்டு நல்லுணர்ச்சி பெறுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உட்கிருபையுடையவனும், அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௪)Tafseer
اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَالْمُتَصَدِّقٰتِ وَالصَّاۤىِٕمِيْنَ وَالصّٰۤىِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰفِظٰتِ وَالذَّاكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّالذَّاكِرٰتِ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا ٣٥
- inna l-mus'limīna
- إِنَّ ٱلْمُسْلِمِينَ
- நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள்
- wal-mus'limāti
- وَٱلْمُسْلِمَٰتِ
- இன்னும் முஸ்லிமான பெண்கள்
- wal-mu'minīna
- وَٱلْمُؤْمِنِينَ
- இன்னும் முஃமினான ஆண்கள்
- wal-mu'mināti
- وَٱلْمُؤْمِنَٰتِ
- இன்னும் முஃமினான பெண்கள்
- wal-qānitīna
- وَٱلْقَٰنِتِينَ
- இன்னும் பணிவான ஆண்கள்
- wal-qānitāti
- وَٱلْقَٰنِتَٰتِ
- இன்னும் பணிவான பெண்கள்
- wal-ṣādiqīna
- وَٱلصَّٰدِقِينَ
- இன்னும் உண்மையான ஆண்கள்
- wal-ṣādiqāti
- وَٱلصَّٰدِقَٰتِ
- இன்னும் உண்மையான பெண்கள்
- wal-ṣābirīna
- وَٱلصَّٰبِرِينَ
- இன்னும் பொறுமையான ஆண்கள்
- wal-ṣābirāti
- وَٱلصَّٰبِرَٰتِ
- இன்னும் பொறுமையான பெண்கள்
- wal-khāshiʿīna
- وَٱلْخَٰشِعِينَ
- இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள்
- wal-khāshiʿāti
- وَٱلْخَٰشِعَٰتِ
- இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள்
- wal-mutaṣadiqīna
- وَٱلْمُتَصَدِّقِينَ
- இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள்
- wal-mutaṣadiqāti
- وَٱلْمُتَصَدِّقَٰتِ
- இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள்
- wal-ṣāimīna
- وَٱلصَّٰٓئِمِينَ
- இன்னும் நோன்பாளியான ஆண்கள்
- wal-ṣāimāti
- وَٱلصَّٰٓئِمَٰتِ
- இன்னும் நோன்பாளியான பெண்கள்
- wal-ḥāfiẓīna
- وَٱلْحَٰفِظِينَ
- இன்னும் பேணுகின்ற ஆண்கள்
- furūjahum
- فُرُوجَهُمْ
- இன்னும் தங்கள் மறைவிடங்களை
- wal-ḥāfiẓāti
- وَٱلْحَٰفِظَٰتِ
- இன்னும் பேணுகின்ற பெண்கள்
- wal-dhākirīna
- وَٱلذَّٰكِرِينَ
- இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- kathīran
- كَثِيرًا
- அதிகம்
- wal-dhākirāti
- وَٱلذَّٰكِرَٰتِ
- இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள்
- aʿadda l-lahu
- أَعَدَّ ٱللَّهُ
- ஏற்படுத்தி இருக்கின்றான்/அல்லாஹ்
- lahum
- لَهُم
- இவர்களுக்கு
- maghfiratan
- مَّغْفِرَةً
- மன்னிப்பை(யும்)
- wa-ajran
- وَأَجْرًا
- கூலியையும்
- ʿaẓīman
- عَظِيمًا
- மகத்தான
நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௫)Tafseer
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗٓ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ۗوَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًاۗ ٣٦
- wamā kāna
- وَمَا كَانَ
- ஆகுமானதல்ல
- limu'minin
- لِمُؤْمِنٍ
- நம்பிக்கையுடைய ஆணுக்கு(ம்)
- walā mu'minatin
- وَلَا مُؤْمِنَةٍ
- நம்பிக்கையுடைய பெண்ணுக்கும்
- idhā qaḍā
- إِذَا قَضَى
- முடிவுசெய்துவிட்டால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்வும்
- warasūluhu
- وَرَسُولُهُۥٓ
- அவனது தூதரும்
- amran
- أَمْرًا
- ஒரு காரியத்தை
- an yakūna
- أَن يَكُونَ
- இருப்பது
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-khiyaratu
- ٱلْخِيَرَةُ
- ஒரு விருப்பம்
- min amrihim
- مِنْ أَمْرِهِمْۗ
- தங்களது காரியத்தில்
- waman
- وَمَن
- யார்
- yaʿṣi
- يَعْصِ
- மாறு செய்வாரோ
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கும்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- அவனது தூதருக்கும்
- faqad
- فَقَدْ
- திட்டமாக
- ḍalla ḍalālan
- ضَلَّ ضَلَٰلًا
- வழிகெட்டுவிட்டார்
- mubīnan
- مُّبِينًا
- தெளிவாக
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை யாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௬)Tafseer
وَاِذْ تَقُوْلُ لِلَّذِيْٓ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ وَاَنْعَمْتَ عَلَيْهِ اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِيْ فِيْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰىهُ ۗ فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًاۗ زَوَّجْنٰكَهَا لِكَيْ لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِيْٓ اَزْوَاجِ اَدْعِيَاۤىِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًاۗ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ٣٧
- wa-idh taqūlu
- وَإِذْ تَقُولُ
- நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!
- lilladhī
- لِلَّذِىٓ
- எவருக்கு
- anʿama
- أَنْعَمَ
- அருள் புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்(வும்)
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- wa-anʿamta
- وَأَنْعَمْتَ
- இன்னும் அருள் புரிந்தீர்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- amsik
- أَمْسِكْ
- வைத்துக்கொள்!
- ʿalayka
- عَلَيْكَ
- உன்னுடன்
- zawjaka
- زَوْجَكَ
- உன் மனைவியை
- wa-ittaqi
- وَٱتَّقِ
- இன்னும் அஞ்சிக்கொள் !
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- watukh'fī
- وَتُخْفِى
- நீர் மறைக்கிறீர்
- fī nafsika
- فِى نَفْسِكَ
- உமது உள்ளத்தில்
- mā
- مَا
- ஒன்றை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- mub'dīhi
- مُبْدِيهِ
- அதை வெளிப்படுத்தக்கூடியவனாக
- watakhshā
- وَتَخْشَى
- இன்னும் பயப்படுகின்றீர்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- aḥaqqu
- أَحَقُّ
- மிகத் தகுதியானவன்
- an takhshāhu
- أَن تَخْشَىٰهُۖ
- அவனை நீர் பயப்படுவதற்கு
- falammā qaḍā
- فَلَمَّا قَضَىٰ
- முடித்துவிட்ட போது
- zaydun
- زَيْدٌ
- சைது
- min'hā
- مِّنْهَا
- அவளிடம்
- waṭaran
- وَطَرًا
- தேவையை
- zawwajnākahā
- زَوَّجْنَٰكَهَا
- அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம்
- likay lā yakūna
- لِكَىْ لَا يَكُونَ
- இருக்கக்கூடாது என்பதற்காக
- ʿalā l-mu'minīna
- عَلَى ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
- ḥarajun
- حَرَجٌ
- சிரமம்
- fī azwāji
- فِىٓ أَزْوَٰجِ
- மனைவிகள் விஷயத்தில்
- adʿiyāihim
- أَدْعِيَآئِهِمْ
- அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின்
- idhā qaḍaw
- إِذَا قَضَوْا۟
- அவர்கள் முடித்துவிட்டபோது
- min'hunna
- مِنْهُنَّ
- அவர்களிடம்
- waṭaran
- وَطَرًاۚ
- தேவையை
- wakāna amru
- وَكَانَ أَمْرُ
- இருக்கின்றது/காரியம்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- mafʿūlan
- مَفْعُولًا
- நடக்கக்கூடியதாக
(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனத்தில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல.) "ஜைது" (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக்கு கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கை யாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக்குக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை திருமணம் செய்துகொள்வதில் யாதொரு தடையிருக்கக்கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௭)Tafseer
مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ۗسُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۗوَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرًاۙ ٣٨
- mā kāna
- مَّا كَانَ
- இருக்கவில்லை
- ʿalā
- عَلَى
- மீது
- l-nabiyi
- ٱلنَّبِىِّ
- நபியின்
- min ḥarajin
- مِنْ حَرَجٍ
- அறவே குற்றம்
- fīmā faraḍa
- فِيمَا فَرَضَ
- கடமையாக்கியதை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lahu
- لَهُۥۖ
- தனக்கு
- sunnata
- سُنَّةَ
- வழிமுறையைத்தான்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fī alladhīna khalaw
- فِى ٱلَّذِينَ خَلَوْا۟
- சென்றவர்களில்
- min qablu
- مِن قَبْلُۚ
- இதற்கு முன்னர்
- wakāna
- وَكَانَ
- இருக்கின்றது
- amru
- أَمْرُ
- செயல்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- qadaran
- قَدَرًا
- தீர்ப்பாக
- maqdūran
- مَّقْدُورًا
- நிறைவேற்றப்படுகின்ற
அல்லாஹ் விதித்த யாதொரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் (உள்ள நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௮)Tafseer
ۨالَّذِيْنَ يُبَلِّغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَيَخْشَوْنَهٗ وَلَا يَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ۗوَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا ٣٩
- alladhīna yuballighūna
- ٱلَّذِينَ يُبَلِّغُونَ
- அவர்கள் எடுத்துச் சொல்வார்கள்
- risālāti
- رِسَٰلَٰتِ
- தூதுச் செய்திகளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wayakhshawnahu
- وَيَخْشَوْنَهُۥ
- இன்னும் அவனை பயப்படுவார்கள்
- walā yakhshawna
- وَلَا يَخْشَوْنَ
- இன்னும் பயப்பட மாட்டார்கள்
- aḥadan
- أَحَدًا
- ஒருவரையும்
- illā l-laha
- إِلَّا ٱللَّهَۗ
- தவிர/அல்லாஹ்வை
- wakafā
- وَكَفَىٰ
- போதுமான(வன்)
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வே
- ḥasīban
- حَسِيبًا
- விசாரணையாளன்
அவர்கள் அல்லாஹ்வினுடைய இத்தகைய கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்; அவ(ன் ஒருவ)னுக்கே பயப்படு வார்கள்; அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்பட மாட்டார்கள். (ஆகவே, நபியே! நீங்களும் மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம். (இதைப் பற்றி அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩௯)Tafseer
مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَۗ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا ࣖ ٤٠
- mā kāna
- مَّا كَانَ
- இருக்கவில்லை
- muḥammadun
- مُحَمَّدٌ
- முஹம்மது
- abā
- أَبَآ
- தந்தையாக
- aḥadin
- أَحَدٍ
- ஒருவருக்கும்
- min rijālikum
- مِّن رِّجَالِكُمْ
- உங்கள் ஆண்களில்
- walākin
- وَلَٰكِن
- என்றாலும்
- rasūla
- رَّسُولَ
- தூதராகவும்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wakhātama
- وَخَاتَمَ
- இறுதி முத்திரையாகவும்
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَۗ
- நபிமார்களின்
- wakāna
- وَكَانَ
- இருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪௦)Tafseer