Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Page: 2

Al-Ahzab

(al-ʾAḥzāb)

௧௧

هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا ١١

hunālika
هُنَالِكَ
அங்குதான்
ub'tuliya
ٱبْتُلِىَ
சோதிக்கப்பட்டார்கள்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
wazul'zilū zil'zālan
وَزُلْزِلُوا۟ زِلْزَالًا
இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
shadīdan
شَدِيدًا
கடுமையாக
அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௧)
Tafseer
௧௨

وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗٓ اِلَّا غُرُوْرًا ١٢

wa-idh yaqūlu
وَإِذْ يَقُولُ
இன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்களும்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
mā waʿadanā
مَّا وَعَدَنَا
நமக்கு வாக்களிக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
warasūluhu
وَرَسُولُهُۥٓ
அவனது தூதரும்
illā
إِلَّا
தவிர
ghurūran
غُرُورًا
பொய்யை
"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்" என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௨)
Tafseer
௧௩

وَاِذْ قَالَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْهُمْ يٰٓاَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚوَيَسْتَأْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُوْلُوْنَ اِنَّ بُيُوْتَنَا عَوْرَةٌ ۗوَمَا هِيَ بِعَوْرَةٍ ۗاِنْ يُّرِيْدُوْنَ اِلَّا فِرَارًا ١٣

wa-idh qālat
وَإِذْ قَالَت
கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
ṭāifatun
طَّآئِفَةٌ
ஒரு சாரார்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yāahla yathriba
يَٰٓأَهْلَ يَثْرِبَ
யஸ்ரிப் வாசிகளே!
lā muqāma
لَا مُقَامَ
தங்குவது அறவே முடியாது
lakum
لَكُمْ
உங்களுக்கு
fa-ir'jiʿū
فَٱرْجِعُوا۟ۚ
ஆகவே, திரும்பிவிடுங்கள்
wayastadhinu
وَيَسْتَـْٔذِنُ
அனுமதிகேட்கின்றனர்
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
min'humu
مِّنْهُمُ
அவர்களில்
l-nabiya
ٱلنَّبِىَّ
நபியிடம்
yaqūlūna
يَقُولُونَ
கூறியவர்களாக
inna
إِنَّ
நிச்சயமாக
buyūtanā
بُيُوتَنَا
எங்கள் இல்லங்கள்
ʿawratun
عَوْرَةٌ
பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன
wamā
وَمَا
ஆனால் இல்லை.
hiya
هِىَ
அவை
biʿawratin
بِعَوْرَةٍۖ
பாதுகாப்பு அற்றதாக
in yurīdūna
إِن يُرِيدُونَ
அவர்கள் நாடவில்லை
illā
إِلَّا
தவிர
firāran
فِرَارًا
விரண்டோடுவதை
அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமலிருந்தும் "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன" என்று கூறி (யுத்த களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (யுத்தத்திலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௩)
Tafseer
௧௪

وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُـِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَآ اِلَّا يَسِيْرًا ١٤

walaw dukhilat
وَلَوْ دُخِلَتْ
நுழைந்தால்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
min
مِّنْ
சுற்றுப் புறங்களில் இருந்து
aqṭārihā
أَقْطَارِهَا
சுற்றுப் புறங்களில் இருந்து அதன்
thumma
ثُمَّ
பிறகு
su-ilū
سُئِلُوا۟
அவர்களிடம் கேட்கப்பட்டால்
l-fit'nata
ٱلْفِتْنَةَ
குழப்பத்தை
laātawhā
لَءَاتَوْهَا
அவர்கள் செய்திருப்பார்கள் அதை
wamā talabbathū
وَمَا تَلَبَّثُوا۟
அவர்கள் தாமதித்திருக்க மாட்டார்கள்
bihā
بِهَآ
அதற்கு
illā yasīran
إِلَّا يَسِيرًا
கொஞ்சமே தவிர
பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். தவிர (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமேயன்றி அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.) ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௪)
Tafseer
௧௫

وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّوْنَ الْاَدْبَارَ ۗوَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا ١٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
kānū ʿāhadū
كَانُوا۟ عَٰهَدُوا۟
ஒப்பந்தம் செய்திருந்தனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
lā yuwallūna
لَا يُوَلُّونَ
ஓடமாட்டார்கள்
l-adbāra
ٱلْأَدْبَٰرَۚ
புறமுதுகிட்டு
wakāna
وَكَانَ
இருக்கின்றது
ʿahdu
عَهْدُ
ஒப்பந்தம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
masūlan
مَسْـُٔولًا
விசாரிக்கப்படுவதாக
அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௫)
Tafseer
௧௬

قُلْ لَّنْ يَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِيْلًا ١٦

qul
قُل
கூறுவீராக!
lan yanfaʿakumu
لَّن يَنفَعَكُمُ
உங்களுக்கு அறவே பலனளிக்காது
l-firāru
ٱلْفِرَارُ
விரண்டோடுவது
in farartum
إِن فَرَرْتُم
நீங்கள் விரண்டோடினால்
mina l-mawti
مِّنَ ٱلْمَوْتِ
மரணத்தைவிட்டு
awi l-qatli
أَوِ ٱلْقَتْلِ
அல்லது கொல்லப்படுவதை விட்டு
wa-idhan
وَإِذًا
அப்போதும்
lā tumattaʿūna
لَّا تُمَتَّعُونَ
சுகமளிக்கப்பட மாட்டீர்கள்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
கொஞ்சமே தவிர
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மரணத்தை விட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடியபோதிலும், உங்களுடைய ஓட்டம் உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்டபோதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்." ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௬)
Tafseer
௧௭

قُلْ مَنْ ذَا الَّذِيْ يَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْۤءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ۗوَلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ١٧

qul
قُلْ
கூறுவீராக!
man
مَن
யார்?
dhā alladhī yaʿṣimukum
ذَا ٱلَّذِى يَعْصِمُكُم
உங்களைப் பாதுகாக்கின்றவர்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வைவிட்டும்
in arāda
إِنْ أَرَادَ
நாடினால்
bikum
بِكُمْ
உங்களுக்கு
sūan
سُوٓءًا
ஒரு தீங்கை
aw arāda bikum
أَوْ أَرَادَ بِكُمْ
அல்லது/அவன் நாடினால்/உங்களுக்கு
raḥmatan
رَحْمَةًۚ
கருணை புரிய
walā yajidūna
وَلَا يَجِدُونَ
இன்னும் காணமாட்டார்கள்
lahum
لَهُم
தங்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
waliyyan
وَلِيًّا
பொறுப்பாளரையோ
walā naṣīran
وَلَا نَصِيرًا
உதவியாளரையோ
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அல்லது உங்களுக்கு அருள் புரியவே நாடினாலும் அதனை உங்களுக்குத் தடுத்து விடுபவன் யார்? அல்லாஹ்வையன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாத்துக் கொள்பவர்களையும் காண மாட்டார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௭)
Tafseer
௧௮

۞ قَدْ يَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِيْنَ مِنْكُمْ وَالْقَاۤىِٕلِيْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَيْنَا ۚوَلَا يَأْتُوْنَ الْبَأْسَ اِلَّا قَلِيْلًاۙ ١٨

qad
قَدْ
திட்டமாக
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-muʿawiqīna
ٱلْمُعَوِّقِينَ
தடுப்பவர்களை(யும்)
minkum
مِنكُمْ
உங்களில்
wal-qāilīna
وَٱلْقَآئِلِينَ
சொல்பவர்களையும்
li-ikh'wānihim
لِإِخْوَٰنِهِمْ
தங்கள் சகோதரர்களுக்கு
halumma
هَلُمَّ
வந்துவிடுங்கள்
ilaynā
إِلَيْنَاۖ
எங்களிடம்
walā yatūna
وَلَا يَأْتُونَ
இன்னும் வரமாட்டார்கள்
l-basa
ٱلْبَأْسَ
போருக்கு
illā qalīlan
إِلَّا قَلِيلًا
குறைவாகவே தவிர
உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் "(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்துவிடுங்கள்" என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௮)
Tafseer
௧௯

اَشِحَّةً عَلَيْكُمْ ۖ فَاِذَا جَاۤءَ الْخَوْفُ رَاَيْتَهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ تَدُوْرُ اَعْيُنُهُمْ كَالَّذِيْ يُغْشٰى عَلَيْهِ مِنَ الْمَوْتِۚ فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَى الْخَيْرِۗ اُولٰۤىِٕكَ لَمْ يُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْۗ وَكَانَ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا ١٩

ashiḥḥatan
أَشِحَّةً
மிகக் கருமிகளாக இருக்கின்றனர்
ʿalaykum
عَلَيْكُمْۖ
உங்கள் விஷயத்தில்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்தால்
l-khawfu
ٱلْخَوْفُ
பயம்
ra-aytahum
رَأَيْتَهُمْ
அவர்களை நீர் காண்பீர்
yanẓurūna
يَنظُرُونَ
அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
tadūru
تَدُورُ
சுழலக்கூடிய நிலையில்
aʿyunuhum
أَعْيُنُهُمْ
அவர்களது கண்கள்
ka-alladhī yugh'shā
كَٱلَّذِى يُغْشَىٰ
மயக்கம் அடைகின்றவனைப் போல்
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
mina l-mawti
مِنَ ٱلْمَوْتِۖ
மரணத்தால்
fa-idhā dhahaba
فَإِذَا ذَهَبَ
சென்றுவிட்டால்
l-khawfu
ٱلْخَوْفُ
பயம்
salaqūkum
سَلَقُوكُم
உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர்
bi-alsinatin
بِأَلْسِنَةٍ
நாவுகளினால்
ḥidādin
حِدَادٍ
கூர்மையான
ashiḥḥatan
أَشِحَّةً
பேராசையுடையவர்களாக
ʿalā l-khayri
عَلَى ٱلْخَيْرِۚ
செல்வத்தின் மீது
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lam yu'minū
لَمْ يُؤْمِنُوا۟
நம்பிக்கை கொள்ளவில்லை
fa-aḥbaṭa
فَأَحْبَطَ
ஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿmālahum
أَعْمَٰلَهُمْۚ
அவர்களின் அமல்களை
wakāna
وَكَانَ
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīran
يَسِيرًا
மிக எளிதாக
(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) யாதொரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அப்பயம் நீங்கி (நம்பிக்கை யாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தை களைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இத்தகையவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௯)
Tafseer
௨௦

يَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ يَذْهَبُوْا ۚوَاِنْ يَّأْتِ الْاَحْزَابُ يَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِى الْاَعْرَابِ يَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَاۤىِٕكُمْ ۖوَلَوْ كَانُوْا فِيْكُمْ مَّا قٰتَلُوْٓا اِلَّا قَلِيْلًا ࣖ ٢٠

yaḥsabūna
يَحْسَبُونَ
எண்ணுகின்றனர்
l-aḥzāba
ٱلْأَحْزَابَ
இராணுவங்கள்
lam yadhhabū
لَمْ يَذْهَبُوا۟ۖ
அவர்கள் செல்லவில்லை
wa-in yati
وَإِن يَأْتِ
வந்தால்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
அந்த இராணுவங்கள்
yawaddū
يَوَدُّوا۟
ஆசைப்படுகின்றனர்
law annahum
لَوْ أَنَّهُم
நிச்சயமாக அவர்கள் இருந்திருக்க வேண்டுமே
bādūna
بَادُونَ
கிராமங்களில்
fī l-aʿrābi
فِى ٱلْأَعْرَابِ
தாங்கள் கிராமவாசிகளுடன்
yasalūna
يَسْـَٔلُونَ
அவர்கள் விசாரிக்கின்றனர்
ʿan anbāikum
عَنْ أَنۢبَآئِكُمْۖ
உங்கள் செய்திகளைப் பற்றி
walaw kānū
وَلَوْ كَانُوا۟
அவர்கள் இருந்தாலும்
fīkum
فِيكُم
உங்களுடன்
mā qātalū
مَّا قَٰتَلُوٓا۟
அவர்கள் போர் புரிந்திருக்க மாட்டார்கள்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
மிகக் குறைவாகவே தவிர
(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவம் முற்றுகையை எடுத்துக் கொண்டு சென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் திரும்ப வந்துவிட்டாலோ யாதொரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகின்றீர்களோ தோல்வியுறு கின்றீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கிவிட்ட போதிலும், ஒரு சொற்ப நேரமே அன்றி (அதிகமாக) போர் புரியமாட்டார்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨௦)
Tafseer