Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப - Word by Word

Al-Ahzab

(al-ʾAḥzāb)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًاۙ ١

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
ittaqi
ٱتَّقِ
பயந்துகொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walā tuṭiʿi
وَلَا تُطِعِ
கீழ்ப்படியாதீர்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கும்
wal-munāfiqīna
وَٱلْمُنَٰفِقِينَۗ
நயவஞ்சகர்களுக்கும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், வஞ்சகருக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧)
Tafseer

وَّاتَّبِعْ مَا يُوْحٰىٓ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ۗاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًاۙ ٢

wa-ittabiʿ
وَٱتَّبِعْ
இன்னும் பின்பற்றுவீராக
mā yūḥā
مَا يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுவதை
ilayka
إِلَيْكَ
உமக்கு
min rabbika
مِن رَّبِّكَۚ
உமது இறைவனிடமிருந்து
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
khabīran
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக
உங்களது இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாகவே இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௨)
Tafseer

وَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗوَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا ٣

watawakkal
وَتَوَكَّلْ
இன்னும் சார்ந்திருப்பீராக!
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வை
wakafā
وَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக இருக்க
(நபியே!) நீங்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். அல்லாஹ்வே (உங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்ள போதுமானவன். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௩)
Tafseer

مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِيْ جَوْفِهٖ ۚوَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰـِٕۤيْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚوَمَا جَعَلَ اَدْعِيَاۤءَكُمْ اَبْنَاۤءَكُمْۗ ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ۗوَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ ٤

mā jaʿala
مَّا جَعَلَ
அமைக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lirajulin
لِرَجُلٍ
ஒரு மனிதனுக்கு
min qalbayni
مِّن قَلْبَيْنِ
இரு உள்ளங்களை
fī jawfihi
فِى جَوْفِهِۦۚ
அவனது உடலில்
wamā jaʿala
وَمَا جَعَلَ
அவன்ஆக்கவில்லை
azwājakumu
أَزْوَٰجَكُمُ
உங்கள்மனைவிகளை
allāī
ٱلَّٰٓـِٔى
எவர்கள்
tuẓāhirūna
تُظَٰهِرُونَ
ளிஹார்செய்கின்றீர்கள்
min'hunna
مِنْهُنَّ
அவர்களில்
ummahātikum
أُمَّهَٰتِكُمْۚ
உங்கள் தாய்மார்களாக
wamā jaʿala
وَمَا جَعَلَ
அவன்ஆக்கவில்லை
adʿiyāakum
أَدْعِيَآءَكُمْ
வளர்ப்புபிள்ளைகளை உங்கள்
abnāakum
أَبْنَآءَكُمْۚ
உங்கள் பிள்ளைகளாக
dhālikum
ذَٰلِكُمْ
அது
qawlukum
قَوْلُكُم
நீங்கள் கூறுவதாகும்
bi-afwāhikum
بِأَفْوَٰهِكُمْۖ
உங்கள் வாய்களால்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaqūlu
يَقُولُ
கூறுகின்றான்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையை
wahuwa
وَهُوَ
அவன்தான்
yahdī
يَهْدِى
வழிகாட்டுகின்றான்
l-sabīla
ٱلسَّبِيلَ
நல்ல பாதைக்கு
எம்மனிதருடைய நெஞ்சிலும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் அமைக்கவில்லை. (ஆகவே, இயற்கை முறைப்படி மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களே உண்மையான சம்பந்தமாகும். வாயால் கூறும் சம்பந்த முறைகள் எல்லாம் உண்மையாகாது. ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் விவாகரத்தைக் கருதி) உங்கள் மனைவிகளில் எவரையும் நீங்கள் உங்கள் தாய் என்று கூறுவதனால் அல்லாஹ் அவர்களை உங்களுடைய (உண்மைத்) தாயாக்கிவிட மாட்டான். (அவ்வாறே உங்களுக்குப் பிறக்காத எவரையும் உங்களுடைய பிள்ளை என்றும்) நீங்கள் தத்தெடுத்துக் கொள்வதனால் அவர்களை உங்கள் (உண்மைச்) சந்ததிகளாக்கிவிட மாட்டான். இவை அனைத்தும் உங்கள் வாய்களால் கூறும் வெறும் வார்த்தைகளே. (அன்றி உண்மையல்ல.) அல்லாஹ் உண்மையையே கூறி, அவன் உங்களுக்கு நேரான வழியை அறிவிக்கிறான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௪)
Tafseer

اُدْعُوْهُمْ لِاٰبَاۤىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْٓا اٰبَاۤءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْ ۗوَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَآ اَخْطَأْتُمْ بِهٖ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ٥

id'ʿūhum
ٱدْعُوهُمْ
அழையுங்கள்! அவர்களை
liābāihim
لِءَابَآئِهِمْ
அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே)
huwa
هُوَ
அதுதான்
aqsaṭu
أَقْسَطُ
மிக நீதமானது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடம்
fa-in lam taʿlamū
فَإِن لَّمْ تَعْلَمُوٓا۟
நீங்கள் அறியவில்லை என்றால்
ābāahum
ءَابَآءَهُمْ
தந்தைகளை அவர்களின்
fa-ikh'wānukum
فَإِخْوَٰنُكُمْ
உங்கள் சகோதரர்கள்
fī l-dīni
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
wamawālīkum
وَمَوَٰلِيكُمْۚ
இன்னும் உங்கள் உதவியாளர்கள்
walaysa
وَلَيْسَ
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
குற்றம்
fīmā
فِيمَآ
எதில்
akhṭatum
أَخْطَأْتُم
நீங்கள் தவறு செய்தீர்களோ
bihi
بِهِۦ
அதில்
walākin
وَلَٰكِن
என்றாலும்
مَّا
எதை
taʿammadat
تَعَمَّدَتْ
வேண்டுமென்று செய்தது
qulūbukum
قُلُوبُكُمْۚ
உங்கள் உள்ளங்கள்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
மகா கருணையாளனாக
ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது சிநேகிதரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. எனினும், (இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலோ (அது உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௫)
Tafseer

اَلنَّبِيُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗٓ اُمَّهٰتُهُمْ ۗوَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِيْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّآ اَنْ تَفْعَلُوْٓا اِلٰٓى اَوْلِيَاۤىِٕكُمْ مَّعْرُوْفًا ۗ كَانَ ذٰلِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا ٦

al-nabiyu
ٱلنَّبِىُّ
நபிதான்
awlā
أَوْلَىٰ
மிக உரிமையாளர்
bil-mu'minīna
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
min anfusihim
مِنْ أَنفُسِهِمْۖ
அவர்களின் ஆன்மாக்களைவிட
wa-azwājuhu
وَأَزْوَٰجُهُۥٓ
இன்னும் அவருடைய மனைவிமார்கள்
ummahātuhum
أُمَّهَٰتُهُمْۗ
அவர்களுக்கு தாய்மார்கள்
wa-ulū l-arḥāmi
وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
இன்னும் இரத்தபந்தங்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
awlā
أَوْلَىٰ
உரிமையுள்ளவர்கள்
bibaʿḍin
بِبَعْضٍ
சிலருக்கு
fī kitābi
فِى كِتَٰبِ
வேதத்தின் படி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை(யும்) விட
wal-muhājirīna
وَٱلْمُهَٰجِرِينَ
முஹாஜிர்களையும்
illā
إِلَّآ
தவிர
an tafʿalū
أَن تَفْعَلُوٓا۟
நீங்கள்ஏதும்செய்தால்
ilā awliyāikum
إِلَىٰٓ أَوْلِيَآئِكُم
உங்கள் பொறுப்பாளர்களுக்கு
maʿrūfan
مَّعْرُوفًاۚ
ஒரு நன்மையை
kāna
كَانَ
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
இது
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
masṭūran
مَسْطُورًا
எழுதப்பட்டதாக
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களை விடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தாம் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் சிநேகிதர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக் கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௬)
Tafseer

وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ۖوَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًاۙ ٧

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக
mina l-nabiyīna
مِنَ ٱلنَّبِيِّۦنَ
எல்லா நபிமார்களிடமும்
mīthāqahum
مِيثَٰقَهُمْ
அவர்களின் ஒப்பந்தத்தை
waminka
وَمِنكَ
உம்மிடமும்
wamin nūḥin
وَمِن نُّوحٍ
இன்னும் நூஹிடம்
wa-ib'rāhīma
وَإِبْرَٰهِيمَ
இன்னும் இப்ராஹீம்
wamūsā waʿīsā
وَمُوسَىٰ وَعِيسَى
இன்னும் மூஸா/இன்னும் ஈஸா
ib'ni
ٱبْنِ
மகன்
maryama
مَرْيَمَۖ
மர்யமின்
wa-akhadhnā
وَأَخَذْنَا
இன்னும் நாம் வாங்கினோம்
min'hum
مِنْهُم
அவர்களிடம்
mīthāqan
مِّيثَٰقًا
ஒப்பந்தத்தை
ghalīẓan
غَلِيظًا
உறுதியான
(நபியே! நம்முடைய தூதை எடுத்துரைக்கும்படி பொதுவாக) நபிமார்களிடமும் (சிறப்பாக) உங்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸாவிடமும் வாக்குறுதி வாங்கிய சமயத்தில், மிக்க உறுதியான வாக்குறுதியையே இவர்களிடமும் நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம் (என்பதை இவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்). ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௭)
Tafseer

لِّيَسْـَٔلَ الصّٰدِقِيْنَ عَنْ صِدْقِهِمْ ۚوَاَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا اَلِيْمًا ࣖ ٨

liyasala
لِّيَسْـَٔلَ
விசாரிப்பதற்காக
l-ṣādiqīna
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களை
ʿan ṣid'qihim
عَن صِدْقِهِمْۚ
அவர்களின் உண்மையைப் பற்றி
wa-aʿadda
وَأَعَدَّ
ஏற்படுத்திஇருக்கிறான்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
தண்டனையை
alīman
أَلِيمًا
வலிமிகுந்த(து)
ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (இறைவன்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௮)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَاۤءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ۗوَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًاۚ ٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
udh'kurū
ٱذْكُرُوا۟
நினைத்துப் பாருங்கள்
niʿ'mata
نِعْمَةَ
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீதுள்ள
idh jāatkum
إِذْ جَآءَتْكُمْ
உங்களிடம்வந்தபோது
junūdun
جُنُودٌ
பல ராணுவங்கள்
fa-arsalnā
فَأَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
rīḥan
رِيحًا
காற்றை(யும்)
wajunūdan
وَجُنُودًا
ராணுவங்களையும்
lam tarawhā
لَّمْ تَرَوْهَاۚ
நீங்கள் பார்க்கவில்லை/ அவர்களை
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதை
baṣīran
بَصِيرًا
உற்று நோக்கியவனாக
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருந்தான். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௯)
Tafseer
௧௦

اِذْ جَاۤءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَنَاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا۠ ۗ ١٠

idh
إِذْ
அவர்கள் வந்த சமயத்தில்
jāūkum
جَآءُوكُم
உங்களிடம்
min fawqikum
مِّن فَوْقِكُمْ
உங்களுக்கு மேல் புறத்திலிருந்(தும்)
wamin asfala
وَمِنْ أَسْفَلَ
கீழ்ப்புறத்திலிருந்தும்
minkum
مِنكُمْ
உங்களுக்கு
wa-idh
وَإِذْ
இன்னும் சமயத்தில்
zāghati
زَاغَتِ
சொருகின
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
wabalaghati
وَبَلَغَتِ
இன்னும் எட்டின
l-qulūbu
ٱلْقُلُوبُ
உள்ளங்கள்
l-ḥanājira
ٱلْحَنَاجِرَ
தொண்டைகளுக்கு
wataẓunnūna
وَتَظُنُّونَ
நீங்கள் எண்ணினீர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
l-ẓunūnā
ٱلظُّنُونَا۠
பல எண்ணங்களை
உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். ([௩௩] ஸூரத்துல் அஹ்ஜாப: ௧௦)
Tafseer