Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௯

Qur'an Surah As-Sajdah Verse 9

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ (السجدة : ٣٢)

thumma
ثُمَّ
Then
பிறகு
sawwāhu
سَوَّىٰهُ
He fashioned him
அவனை சமமாக்கினான்
wanafakha
وَنَفَخَ
and breathed
இன்னும் ஊதினான்
fīhi
فِيهِ
into him
அவனில்
min rūḥihi
مِن رُّوحِهِۦۖ
from His spirit
தனது உயிரிலிருந்து
wajaʿala
وَجَعَلَ
and made
இன்னும் அவன் அமைத்தான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-samʿa
ٱلسَّمْعَ
the hearing
செவியை(யும்)
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
and the sight
பார்வைகளையும்
wal-afidata
وَٱلْأَفْـِٔدَةَۚ
and feelings;
இதயங்களையும்
qalīlan
قَلِيلًا
little
குறைவாகவே
mā tashkurūna
مَّا تَشْكُرُونَ
[what] thanks you give
நன்றி செலுத்துகின்றீர்கள்

Transliteration:

Thumma sawwaahu wa nafakha feehi mir roohihih; wa ja'ala lakumus sam'a wal-absaara wal-af'idah; taqaleelam maa tashkuroon (QS. as-Sajdah:9)

English Sahih International:

Then He proportioned him and breathed into him from His [created] soul and made for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful. (QS. As-Sajdah, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத் தன்னுடைய "ரூஹை" அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே! (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௯)

Jan Trust Foundation

பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தனது (-தான் படைத்த) உயிரிலிருந்து அவனில் ஊதினான். உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.