குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௪
Qur'an Surah As-Sajdah Verse 4
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۗ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِيٍّ وَّلَا شَفِيْعٍۗ اَفَلَا تَتَذَكَّرُوْنَ (السجدة : ٣٢)
- al-lahu alladhī
- ٱللَّهُ ٱلَّذِى
- Allah (is) the One Who
- அல்லாஹ்தான்
- khalaqa
- خَلَقَ
- created
- படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- and the earth
- பூமியையும்
- wamā baynahumā
- وَمَا بَيْنَهُمَا
- and whatever (is) between them
- அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்
- fī sittati ayyāmin
- فِى سِتَّةِ أَيَّامٍ
- in six periods
- ஆறு நாட்களில்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- is'tawā
- ٱسْتَوَىٰ
- established Himself
- உயர்ந்தான்
- ʿalā l-ʿarshi
- عَلَى ٱلْعَرْشِۖ
- on the Throne
- அர்ஷின் மீது
- mā lakum
- مَا لَكُم
- Not for you
- உங்களுக்கு இல்லை
- min dūnihi
- مِّن دُونِهِۦ
- besides Him besides Him
- அவனையன்றி
- min waliyyin
- مِن وَلِىٍّ
- any protector
- பொருப்பாளரோ
- walā shafīʿin
- وَلَا شَفِيعٍۚ
- and not any intercessor
- பரிந்துறையாளரோ
- afalā tatadhakkarūna
- أَفَلَا تَتَذَكَّرُونَ
- Then will not you take heed?
- நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா ?
Transliteration:
Allaahul lazee khalaqas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati ayyaam;Thummas tawaa 'alal 'arsh; maa lakum min doonihee minw-wwaliyyinw-wala shafee'; afala tatazakkaroon(QS. as-Sajdah:4)
English Sahih International:
It is Allah who created the heavens and the earth and whatever is between them in six days; then He established Himself above the Throne. You have not besides Him any protector or any intercessor; so will you not be reminded? (QS. As-Sajdah, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களை) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறவேண்டாமா? (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௪)
Jan Trust Foundation
அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷ் மீது உயர்ந்தான். அவனை அன்றி உங்களுக்கு பொறுப்பாளரோ பரிந்துரையாளரோ (எவரும்) இல்லை. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?