Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௩

Qur'an Surah As-Sajdah Verse 3

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّآ اَتٰىهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ (السجدة : ٣٢)

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
Or (do) they say
அல்லது கூறுகிறார்களா?
if'tarāhu
ٱفْتَرَىٰهُۚ
"He invented it?"
இதை அவர் இட்டுக் கட்டினார் என்று
bal
بَلْ
Nay
மாறாக
huwa
هُوَ
it
இதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the truth
உண்மையா(ன வேதமா)கும்
min rabbika
مِن رَّبِّكَ
from your Lord
உமது இறைவனிடமிருந்து
litundhira
لِتُنذِرَ
that you may warn
நீர் எச்சரிப்பதற்காக
qawman
قَوْمًا
a people
ஒரு சமுதாயத்தை
mā atāhum
مَّآ أَتَىٰهُم
not has come to them
அவர்களிடம் வராத
min nadhīrin
مِّن نَّذِيرٍ
any warner
எச்சரிப்பவர் எவரும்
min qablika
مِّن قَبْلِكَ
before you before you
இதற்கு முன்னர்
laʿallahum yahtadūna
لَعَلَّهُمْ يَهْتَدُونَ
so that they may be guided
அவர்கள் நேர்வழி பெறுவதற்காக

Transliteration:

Am yaqooloonaf taraahu bal huwal haqqu mir rabbika litunzira qawma maaa ataahum min nazeerim min qablika la'allahum yahtadoon (QS. as-Sajdah:3)

English Sahih International:

Or do they say, "He invented it"? Rather, it is the truth from your Lord, [O Muhammad], that you may warn a people to whom no warner has come before you [so] perhaps they will be guided. (QS. As-Sajdah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நமது நபி) "இதனை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்" என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உங்களது இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உங்களுக்கு முன்னர் இதுவரையில் யாதொரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக! (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௩)

Jan Trust Foundation

ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை அவர் (-முஹம்மது) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, இதுதான் உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை -அவர்கள் நேர்வழி பெறுவதற்காக- நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது).