Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௭

Qur'an Surah As-Sajdah Verse 27

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَاۤءَ اِلَى الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَأْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْۗ اَفَلَا يُبْصِرُوْنَ (السجدة : ٣٢)

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
Do not they see
அவர்கள் பார்க்கவில்லையா?
annā
أَنَّا
that We
நிச்சயமாக நாம்
nasūqu
نَسُوقُ
drive
ஓட்டிவருகிறோம்
l-māa
ٱلْمَآءَ
water
மழை நீரை
ilā l-arḍi
إِلَى ٱلْأَرْضِ
to the land
பூமிக்கு
l-juruzi
ٱلْجُرُزِ
[the] barren
காய்ந்த(து)
fanukh'riju
فَنُخْرِجُ
then We bring forth
உற்பத்தி செய்கிறோம்
bihi
بِهِۦ
thereby
அதன் மூலம்
zarʿan
زَرْعًا
crops
விளைச்சலை
takulu min'hu
تَأْكُلُ مِنْهُ
eat from it
சாப்பிடுகின்றன/அதில்
anʿāmuhum
أَنْعَٰمُهُمْ
their cattle
அவர்களின் கால்நடைகளும்
wa-anfusuhum
وَأَنفُسُهُمْۖ
and they themselves?
அவர்களும்
afalā yub'ṣirūna
أَفَلَا يُبْصِرُونَ
Then do not they see?
அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

Transliteration:

Awalam yaraw annaa nasooqul maaa'a ilal lardil juruzi fanukhriju bihee zar'an taakulu minhu an'aamuhum wa anfusuhum afalaa yubsiroon (QS. as-Sajdah:27)

English Sahih International:

Have they not seen that We drive water [in clouds] to barren land and bring forth thereby crops from which their livestock eat and [they] themselves? Then do they not see? (QS. As-Sajdah, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக் கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மழை நீரை ஓட்டிவருகிறோம்; அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும் அவர்களும் சாப்பிடுகின்ற விளைச்சலை உற்பத்தி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதை) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?