Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௬

Qur'an Surah As-Sajdah Verse 26

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِيْ مَسٰكِنِهِمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍۗ اَفَلَا يَسْمَعُوْنَ (السجدة : ٣٢)

awalam yahdi
أَوَلَمْ يَهْدِ
Does it not guide
தெளிவுபடுத்தவில்லையா?
lahum
لَهُمْ
[for] them
அவர்களுக்கு
kam
كَمْ
(that) how many
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
We have destroyed
நாம் அழித்தது
min qablihim
مِن قَبْلِهِم
before them before them
இவர்களுக்கு முன்னர்
mina l-qurūni
مِّنَ ٱلْقُرُونِ
of the generations
பல தலை முறையினர்களை
yamshūna
يَمْشُونَ
they walk about
சுற்றித் திரிந்தனர்
fī masākinihim
فِى مَسَٰكِنِهِمْۚ
in their dwellings
தங்கள் வசிப்பிடங்களில்
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
Indeed in that
நிச்சயமாக இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍۖ
surely, are Signs
பல அத்தாட்சிகள்
afalā yasmaʿūna
أَفَلَا يَسْمَعُونَ
Then do not they hear?
அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?

Transliteration:

Awalam yahdi lahum kam ahlaknaa min qablihim minal qurooni yamshoona fee zaalika la aayaatin afalaa yasma'oon (QS. as-Sajdah:26)

English Sahih International:

Has it not become clear to them how many generations We destroyed before them, [as] they walk among their dwellings? Indeed in that are signs; then do they not hear? (QS. As-Sajdah, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்கமாட்டார்களா? (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்றி திரிந்த எத்தனையோ பல தலை முறையினர்களை நாம் அழித்தது (பாவிகளின் விஷயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை) அவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?