Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௪

Qur'an Surah As-Sajdah Verse 24

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا مِنْهُمْ اَىِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْاۗ وَكَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ (السجدة : ٣٢)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We made
இன்னும் உருவாக்கினோம்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களில்
a-immatan
أَئِمَّةً
leaders
தலைவர்களை
yahdūna
يَهْدُونَ
guiding
நேர்வழி காட்டுகின்றனர்
bi-amrinā
بِأَمْرِنَا
by Our Command
நமது கட்டளையின்படி
lammā ṣabarū
لَمَّا صَبَرُوا۟ۖ
when they were patient
அவர்கள் பொறுமையாக இருந்தபோது
wakānū
وَكَانُوا۟
and they were
இன்னும் அவர்கள் இருந்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
of Our Verses
நமது வசனங்களை
yūqinūna
يُوقِنُونَ
certain
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக

Transliteration:

Wa ja'alnaa minhum a'immatany yahdoona bi amrinaa lammaa sabaroo wa kaanoo bi aayaatinaa yooqinoon (QS. as-Sajdah:24)

English Sahih International:

And We made from among them leaders guiding by Our command when they were patient and [when] they were certain of Our signs. (QS. As-Sajdah, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

நம்முடைய கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (-உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின் படி நேர்வழி காட்டுகின்ற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்த தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்.