Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௨௦

Qur'an Surah As-Sajdah Verse 20

ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا الَّذِيْنَ فَسَقُوْا فَمَأْوٰىهُمُ النَّارُ كُلَّمَآ اَرَادُوْٓا اَنْ يَّخْرُجُوْا مِنْهَآ اُعِيْدُوْا فِيْهَا وَقِيْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِيْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ (السجدة : ٣٢)

wa-ammā
وَأَمَّا
But as for
ஆக
alladhīna fasaqū
ٱلَّذِينَ فَسَقُوا۟
those who are defiantly disobedient
பாவம் செய்தவர்கள்
famawāhumu
فَمَأْوَىٰهُمُ
then their refuge
அவர்களின் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
(is) the Fire
நரகமாகும்
kullamā arādū
كُلَّمَآ أَرَادُوٓا۟
Every time they wish
அவர்கள் நாடும்போதெல்லாம்
an yakhrujū
أَن يَخْرُجُوا۟
to come out
அவர்கள் வெளியேறுவதற்கு
min'hā
مِنْهَآ
from it
அதிலிருந்து
uʿīdū
أُعِيدُوا۟
they (will) be returned
அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
waqīla
وَقِيلَ
and it (will) be said
இன்னும் சொல்லப்படும்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
dhūqū
ذُوقُوا۟
"Taste
சுவையுங்கள்
ʿadhāba
عَذَابَ
(the) punishment
வேதனையை
l-nāri
ٱلنَّارِ
(of) the Fire
நரக
alladhī kuntum bihi tukadhibūna
ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
which you used (to) [in it] deny"
நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த

Transliteration:

Wa ammal lazeena fasaqoo famaawaahumn Naaru kullamaaa araadooo any yakhrujoo minhaaa u'eedoo feehaa wa qeela lahum zooqoo 'zaaaban Naaril lazee kuntum bihee tukazziboon (QS. as-Sajdah:20)

English Sahih International:

But as for those who defiantly disobeyed, their refuge is the Fire. Every time they wish to emerge from it, they will be returned to it while it is said to them, "Taste the punishment of the Fire which you used to deny." (QS. As-Sajdah, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்படும். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு| “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, பாவம் செய்தவர்கள் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக வேதனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும்.