குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௬
Qur'an Surah As-Sajdah Verse 16
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًاۖ وَّمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ (السجدة : ٣٢)
- tatajāfā
- تَتَجَافَىٰ
- Forsake
- தூரமாக இருக்கும்
- junūbuhum
- جُنُوبُهُمْ
- their sides
- அவர்களின் விலாக்கள்
- ʿani l-maḍājiʿi
- عَنِ ٱلْمَضَاجِعِ
- from (their) beds;
- படுக்கைகளை விட்டு
- yadʿūna
- يَدْعُونَ
- they call
- வணங்குவார்கள்
- rabbahum
- رَبَّهُمْ
- their Lord
- தங்கள் இறைவனை
- khawfan
- خَوْفًا
- (in) fear
- பய(த்துடனு)ம்
- waṭamaʿan
- وَطَمَعًا
- and hope
- ஆசையுடனும்
- wamimmā razaqnāhum
- وَمِمَّا رَزَقْنَٰهُمْ
- and out of what We have provided them
- இன்னும் நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
- yunfiqūna
- يُنفِقُونَ
- they spend
- தர்மம் செய்வார்கள்
Transliteration:
Tatajaafaa junoobuhum 'anil madaaji'i yad'oona rabbahum khawfanw wa tama'anw wa mimmaa razaqnaahum yunfiqoon(QS. as-Sajdah:16)
English Sahih International:
Their sides part [i.e., they arise] from [their] beds; they supplicate their Lord in fear and aspiration, and from what We have provided them, they spend. (QS. As-Sajdah, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.