குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஜ்தா வசனம் ௧௫
Qur'an Surah As-Sajdah Verse 15
ஸூரத்துஸ் ஸஜ்தா [௩௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا يُؤْمِنُ بِاٰيٰتِنَا الَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ۩ (السجدة : ٣٢)
- innamā yu'minu
- إِنَّمَا يُؤْمِنُ
- Only believe
- நம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- in Our Verses
- நமது வசனங்களை
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- idhā dhukkirū
- إِذَا ذُكِّرُوا۟
- when they are reminded
- அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
- bihā
- بِهَا
- of them
- அவற்றின் மூலம்
- kharrū
- خَرُّوا۟
- fall down
- வீழ்ந்து விடுவார்கள்
- sujjadan
- سُجَّدًا
- prostrating
- சிரம் பணிந்தவர்களாக
- wasabbaḥū
- وَسَبَّحُوا۟
- and glorify
- இன்னும் துதிப்பார்கள்
- biḥamdi
- بِحَمْدِ
- (the) praises
- புகழ்ந்து
- rabbihim
- رَبِّهِمْ
- (of) their Lord
- தங்கள் இறைவனை
- wahum
- وَهُمْ
- and they
- இன்னும் அவர்கள்
- lā yastakbirūna
- لَا يَسْتَكْبِرُونَ۩
- are not arrogant are not arrogant
- பெருமையடிக்க மாட்டார்கள்
Transliteration:
Innamaa yu'minu bi aayaatinal lazeena izaa zukkiroo bihaa kharroo sujjadanw wa sabbahoo bihamdi rabbihim wa hum laa yastakbiroon(QS. as-Sajdah:15)
English Sahih International:
Only those believe in Our verses who, when they are reminded by them, fall down in prostration and exalt [Allah] with praise of their Lord, and they are not arrogant. (QS. As-Sajdah, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கின்றார்களோ அவர்கள்தாம் நம்முடைய வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள். (ஸூரத்துஸ் ஸஜ்தா, வசனம் ௧௫)
Jan Trust Foundation
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம் எவர்கள் அவர்களுக்கு அவற்றின் மூலம் அறிவுரை கூறப்பட்டால் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) வீழ்ந்து, தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்களோ அவர்கள்தான். அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.